பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தேவார ஒளிநெறிக் கட்டுரை மலர்தூவித் தொழுதேத்தி அவரை எண்ணும் அடியார்க்கு இடுக்கண் இல்லை. அவரைத் தாகத்தோடும் அண்மித் தொழுந் தொண்டர் நல்ல போகமுள்ள மனத்தாய்ப் புகழ் பெற்றுத் திரிவர். அவரைப் பாடும் அடியார்களைப் பாவம் அடையாது. அவரை இருபொழுதும் முட்டில்லா மல் அன்பு பாராட்டும் அடியார்கள் பாவம் அறியார். நல்லூரைப் பிரியாது அங்கை தலைக்கு ஏற்றி ஆண்டருள் என்று இறைவன் திருவடி நீழலில் தங்கு மனத்தவர் தடுமாற்றம் அறுப்பார். 127. நல்லூர்ப் பெருமணம் :-கடல் முத்தை மண லாகக் கொண்டு பாவையர் மணல் கூட்டி (பொம்மைக்) கலியாணம் செய்யும் ஊர். நல்லியலார் தொழும் பதி. அன்புறு சிங்கை கொண்ட அடியவர் நன்மை அடையும் பதி. இறைவனது கட்டக் கொட்டு ஒயாக பதி, தேவி வெண்ணிற்று உமை : ஞான சம்பந்தர் இறைவன் திரு வடியைப் பெற விரும்பி எம்மைப் போக்கருளிர்” 3Tଈ୪T வேண்டிய தலம். இறைவன் இட்டப்பட்டு இன்புடன் உறையும் பதி. பெருமணத்து ஈசன் இணையடி ஏத்து வோர் துன்பிலாத் தொண்டர். பெருமணத்து ஈசனது தாளைத் தொழ வீடு எளிதாம். 128. நள்ளாறு :-ஞாழல், குரா, சுரபுன்னை மீனம் விசும் ஊர். கறுமணத்தை காடி வண்டுகள் பாடும் ஊர். வயலும் குளிர் புனலுஞ் சூழ்ந்த ஊர். தேவி திருநாமம். போகமார்த்த பூண் முலையாள். இறைவன் உலகுய்யத் தேவியோடும் இருக்குத் தலம்; செம்பொன் மால, வாசிகை, புகை, அவி, பாட்டு இவை விளங்கும் பெருமை வாய்க்க ஊர். பூவில் மணமும், நீரில் அழகும், சந்த னத்தில் நறு மண்மும், காவிற் பாடலும் பொலியும் தலம். மலரும் நீர்க்குடமும் எடுத்து மறையவர் நான்மறை வழியே விரும்பிப் பணிசெய்யுங் கலம், கடனத்துடன் இசைபாடும் அடியார்கள் மனது ஒருமையுடன் வழிபாடு செய்யுங் திருப்பதி. மந்தமாக ஒலிக்கும் முழவொலி யுடன் நடைபெறும் விழாவொலியும், வேதச் சந்த ஒலியும்