பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தேவார ஒளிநெறிக் கட்டுரை 181. மருகல் :-நீர் நிறை ஊர் : மடையிற் குவளை மலரும் ஊர். மாடவீதிகள் கொண்ட ஊர். வீதிகளில் மனே கெழு மாடங்கள் மலியும் ஊர். மாடங்களில் மேகமும் மதியும் தவழும் ஊர். மாடங்களில் நெடுங்கொடி கள் விண்ணைத் தடவும் ஊர். பாடலும் முழவும் விழவும் நீங்காத பதி. மதில் சூழ்ந்த தலம். புறச் சமயத்தை நீக்கினவர் தொழும் பதி. அங்கமும், வேகமும், மந்திர மும் பயின்ற அந்தணர் நாளும் அடி பாவும் ஊர். மறையோர்கள் வளர்த்த செந்தியின் கரும் புகை விம்மும் மாடவீதியைக் கொண்ட ஊர். ஞானம் வல்லவர் வாழும் பதி. கோயில் லக்ஷ்மீகரம் பொருந்திய மணிக் கோயில்’’. குறிப்பு :- இவளேத் துயராக்கினேயே ' என ஒரு அடி யாளின் துயர்திர ரீ சம்பந்த சுவாமிகள் பாடிய இவ்வூர்ப் பதிகம் : விடங் ர்ேத்த திருப்பதிகம் ' எனப்படும். 182. மழபாடி :-இங்கு சோலை மேகத்தை அளாவும். காலையில் வண்டு கிண்டுஞ் சோலையிற் கிளி சொற்பொருள் பயிலும். குருகு (குருக்கத்தி) மலர் நெருங்கும். நீண்ட பொழிலில் தென்றல் உலவும், பனம்பழம் விழும். மதி தவழும் மாளிகை நெருங்கிச் சூழும். அந்தணர் வேள்வி, மற்ையொலி, செந்தமிழ்க் கீதம் வளர்தரும் பதி மழபாடி, அ.அ இறைவனது உறைவிடம்; அடியார்களும் தவத்தார் களும் சாரும் இடம். தேவர்க்ள், சித்தர்கள் இறை வனைப் பால், நெய் முதலிய ஆனஞ்சு கொண்டு ஆட்டி மலர் கொண்டு பூசிக்கும் பதி. பலி, பாட்டு, முழவு முதலிய பல ஒசைகள் மலியும் பதி. மங்கைமார் கடம் ப்யிலும் ஊர். மாலும், பிரமனும், வான நாடரும் வழிபட்ட சலம். சுவாமி பெயர் (வஜ்ரஸ் கம்பேக ர ரர்தலின்) சுவாமி கனவயிரத் திரள், காச்சிலாக பொன், ஆச்சிலாத பளிங்கு எனப்பட்டுள்ளார். மருந்து, வள்ளல் எனவும் பாராட்டப்பட்டுள்ளார். மழபாடியை வணங்குங்கள், வாழ்த்துங்கள் வினை ஒய மழபாடி மருந்தினை உள்ளத்தில் ஆதரியுங்கள். துயர் தீர, வினை போக மழபாடியைத் தொழுங்கள்.