பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களேப் பற்றிய குறிப்புக்கள் 169 மழபாடியைச் சேர்ந்து ஏக்துங்கள், புகழ் ஆகும். மழபாடி யண்ணல் வல்வினே களே வார் ; , பத்தியாற் பாடிப் பரிந்தவர்க்கு அருள் செய்வர் ; வாங் கொடுப்பர். அவர் திருப்பாகம் விதியாம், விளைவாம், கதியாம், மதியாம், வலியாம் ; அவரைச் சிக்கிப்பவர்தம் வினே தேயும். அவர் திறத்தைத தியானிக்க மேல்வினை மெலியும். அவரை நாடோறுங் கும்பிடக் குறி கூடும். மழபாடியை நினைக்கப் பிணி போகும். மழபாடியைக் கைதொழுவார் தகவாளர். மழபாடியைத் தலையால் வணங்கத் தவ மாம். மழபாடியை நாடினர்க்கு நல்குரவு இல்லை. மழபாடியைப் பரவினுள் வினை பற்றறுப்பார். மழபாடியைச் சொன்னவர், இசையுடன் வழிபாடுசெய்து தியானித்தவர் இவர்தம் வினை ஒய்ந்துபோம். a 183. மறைக்காடு :-கடற்கரையூர். கடலெறிமணி கள் கரையில் ஒளிமிக வீசும் ஊர். கடலொலிகொண்ட ஊா. சங்கையும் முததையும கடலானது கரைககு எற.ஆம ஊர். மணற்கானலிற் கடலெறி முத்தம் ஒளிவீசி இரவின் பேரிருளைப் போக்கும். செம்பவளம் கடற்றிாையால் உந்தப்படும். கடற்கரையிற் சேல் மீன் ஒளிரும். சங்கு, கப்பல், சுறவம் இவை கடலிற் காண லாகும். கண்டலும், கழியும், கப்பல்கள் செல்லுங் கடலின் ஒதமும் விளக்க முற்ம். இக்கலம் கே. ர்ை பொ ழில், மேகமளாவு பொழில், இருண்ட பொழில் சூழ்ந்த ஊர். பொழிலின் மலர்களி லிருந்து வண்டு இசை முரலும். சோலேயின் மங்களில் வண்டு மதுவுண்டு இசைபாடும். படர் செம் பவளம், முத்து, பன்மலர், பொழில் இவை கான லாகும். மரவம் (கடப்ப மரம்) நீண்ட சோலையில் மழலை வண்டு யாழ்செய்யும். பொழிலின் மாதவியின் மீதுபட்டுத் தென்றல் மணம் வீசும். குரவம், குருக்கத்தி, புன்னை, ஞாழல் - இவை பொழிலில் மருவும். வயலிற் சங்குகள் கிடக்கும் , மடமையுடைய குருகு தனது இளம்பெடை யெனக் கருதித் தாழையின் வெண் மடலைப் புல்கும். இவ்வூர் மலைபோலும் மதில்சூழ்ந்த ஊர். கடல் கொழித்த டிணியைக் கணிகை மார் கவரும் ஊர். கடலிற்