பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.2 தேவார ஒளிநெறிக் கட்டுரை உங்கள் வினை திர மாகறல் ஈசர் அடியை வாழ்த்தி வழிபாடுசெய்ய எழுமின் அவரை வாழ்த்தி அவர் திருவடியைச் சிந்திப்பருடைய வினைகள் மிகவும் அஞ்சி அகலும. 185. மாணிகுழி:- கெடில நதிக்கரையில் உள்ள ஊர். கெடிலப் புனல் வயலிற் பாயும் ஊர். பொழி லில்-பண் பயிலும் வண்டு பல (மலர்) கெண்டி மது வுண்டு நிறையும்; மல்லிகை, குருந்து, கொடி மாதவி, செருந்தி, குரா, புன்னை, தாது சொரிந்து மலியும் ; அழகிய மஞ்ஞை நடமாடுதலைக் கண்டு வண்டுகள் உலாவி இசைபாடும். பலாப்பழங்கள் சொரிந்து மணம்வீசும். தெங்கின் இளநீர் வாழைமீது விழும் வழியில் கிரை கமுகின் தாறு உதிரும். கன்னிவாளே குதிகொள்ளும் ; வள்ளைக் கொடிபடரும் ; பழனத்தில் தாமரை மனங் கமழும். வண்டு முரலும். சேறு நிறை வயலில் இள எருமைகள் படிந்து மனைவந்து சேரும். மனநிறை சோலை புடைசூழும் மாடங்கள் டிேய மாணிகுழி தேவர் தலைவனது நகராகிய (அமராவதி) போல விளங்கும். இங்கு மாதர் புனல் குடைந்து ஆடுவர்; தமது மாளிகையில் மன்னி ஊசலில் ஏறி யமர்ந்து இனிதாக இசைபாடுவர். திருமாணிகுழி என்னுங் தலம் சிவபெரு மான் மகிழ்ந்துறையும் தானம். கிருமால் குறளனகி (வாமனுவதாரத்தில்) கித்த நியமத்துடன் சித்தத்தை மிகவும் ஒருக்கிச் சிவபிரான வழிபட்ட தலம். மாணி .a மாணிகுழி ’’ எனப்பட்டுளது تمامه، ۹-- نازی) 186. மாந்துறை :-காவிரியின் வடகரையில் உள்ள தலம். சூரியன், சந்திரன், வானவர், மன்னர்கள் வழி பட்ட தலம். மாந்துறையை எக்காலமும் உள்ளத்து அழுத்துதல் அழகு. அத்தலம் ஈசனுக்கு இடமாம். மாந்துறை ஈசனைத் தூபம், தீபம், பாட்டு, அவி, மலர் இவையுடன் வழிபட்டு அவன் நாமங்களை நாவினுற் சொல்பவர் தலையாய தவத்தோராவர். மாந்துறை யிச னது தேவர் தொழுங் கழலை ஏத்துவோம், பணிவோம்.