பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தேவார ஒளிநெறிக் கட்டுரை

யாது. அடியார்க்கு இறைவனே பற்று, புகல், செல்வம், நீழல்; இறைவனே அடியாருக்கு உற்ற தலைவர், நம்பர்.

10. அடியார் இன்னார், அவர் நிலை, குணம் இத்தன்மைய என்பது [5 (6) - (7)] :-அடியார்க்கும் சிவ பெருமானைப் போலச் சிவசாரூபம் விளங்கும். அடியார் மனந்தளரார், சிரிப்பார், களிப்பார், குனிப்பார். இறைவன் பேச்சையே பேசி இன்புறுவார். இறைவன் பெருமையைப் பற்றிய பேச்சுக்களுக்கன்றி வேறு பேச்சுக்களுக்குத் தமது செவி கொடார். இத்தகைய அடியார் ஞானிகளாயும், தம்மை அடைந்தார்க்கு அருள் தரவல்ல ஆற்றலுடையவர்களாயும் விளங்குவார்.

குலச்சிறை நாயனார் ஐந்தெழுத்து ஒதும் நல்லோர்களையும், கோவணம், பூதி சாதனம் கொண்ட பெரியோர்களையுங் கண்டால் தொழுதெழுவர்.

சிவபூசை செய்யும் அடியாகளுக்குக் கருதிய பொருள்கள் யாவும் தாமே கைகூடுமாதலின், அவர்கள் சுவர்க்கத்தையும் ஒரு பொருளாக மதிக்கமாட்டார்கள். அவர்களிடம் ஈகைக் குணம் தலை சிறந்து விளங்கும். மழையின்றி வளம் குன்றினும் அவர்கள் இரப்போர்க்கு இல்லை என மாட்டார்கள்.

11. அடியாரும் பிற சமயங்களும் [5 (9)]:-அடியார்கள் சைவ சமயமே மெய்ச் சமயம் எனக் கொண்டு அமணர், சாக்கியர் முதலியோரது சமயங்களைப் போற்றார்கள் ; பொருட்படுத்த மாட்டார்கள்.

12. அடியார் இறைவனைப் போற்றும் வேளை. [5 (10)] :- அடியார்கள் இறைவனை இரவும் பகலும் காலையு மாலையும் (இருபோதும்) அன்புடன் போற்றிப் பணிவார்கள். சிவகாமங்கள், சிவஸ்தலங்கள், சிவனது திருவருட் செல்வம் என்னும் விஷயங் களைப்பற்றி நண்பகலிலும் மாலையிலும் கூட்டங்கூடிப் பேசி மகிழ்வார்கள். எழுந்திருக்கும்பொழுதும், நடக்கும்பொழுதும் “பெம்மான்” என இறைவனை வாழ்த்தி ஏத்துவார்கள். விடியற் காலையில் திருநீறுபூசிப் பெருங்கூட்டமாகக் கூடி