பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. அடியார்

5

 இறைவனைத் தொழுதேத்துவார்கள்.வேளை தவறாது இறைவனை நறுமணத் தூபமிட்டும், பூ இட்டும் வழிபடுவார்கள்.

13. அடியார்கள் வேடம் [5 (11)] :-அடியார்களுக்குச் சிவ ஒளி உள்ளும் புறமும் விளங்கும். அவர் மேனியிற் சிவநீறு பொலியும்.

14. அடியாரும் யமதூதரும் [5 (12)] :-அடியார் ஐந்தெழுத்தோதுங் காரணத்தால் இயமன் தூதரும் அவரிடம் அணுக அஞ்சுவார். நிரம்பிய பக்தியுடன் துதிக்க முயலும் அன்பர்களிடம் கொடிய காலன் முடுகான். என்றைக்கு மார்க்கண்டர் பொருட்டுத் தனது உயிரையே நமன் இழந்தானோ அன்று முதல் ‘சிவனடியார்’ என்றால் நமன் தூதர் நணுக அஞ்சுவர். சிவனடியாரையே அன்றிச் சிவனடியார்களின் அடியாரைக் கண்டாலுங் கூடக் கடிய கூற்றுவன் அகலுவான்.

15. சிவனடியார் ஊன் உண்ணுதலைப்பற்றித் தருக்கம் [5 (18)]:-ஊன் உண்ணுதல் நன்றெனக் சில அடியாரும் தீதெனச் சில அடியாரும் வாக்கு வாதம் செய்து வந்தனர். [இதனால் சிவனடியார் என்று அக்காலத்துப் பாராட்டப் படுவதற்குச் சிவன் மாட்டுள்ள அன்பே பிரதானமாகக் கொள்ளப்பட்டது. போலும்.]

11. சிவனடியாரும் கள்ளுண்டலும் [5 (14)] :- சிவனடியார்கள் கள்ளைக் குடித்து ஊர் ஊராகத் திரிவார்க ளாயினும் அவர்களை இகழ்பவர்கள் அறிவீனர்களே எனக் கூறப்பட்டுளது.

17. அடியாரும் ஆண்டவனும் [5 (15)] :-அடியவரையும் ஆண்டவனையும் ஒக்க நினைத்துத் தியானிக்க நமது வினை தொலையும்.

18. அடியாரோ டிணக்கம் [5 (16)] :-தொண்டர் கூட்டத்திடையே இனிதிருக்க நமது வல்வினைகள் நம்மை விட்டொழியும். திருநீறுடன் விளங்கும் சிவனடியாரே நமக்கு உற்ற கதி; உற்ற சார்பு; ஆதலால் அடியாருடைய அடியே நமக்குப் பொருத்தமெனக் கொண்டு அதனையேஅடைவோமாக.