பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தலங்கள்: தலங்களைப் பற்றிய குறிப்புக்கள்

185

 வென்றிக் கொடிகள் நிரம்பி மதிலை மூடும். அக்கொடிகள் பறப்பது (இங்கு) வந்து பரம்பொருளை வணங்குங்கள் என்று விண்ணோரை விளித்து அழைப்பது போலத் தோன்றும்.

(ii) தலச்சிறப்பு:-திருவீழிமிழலை-புனிதமான ஊர். தீர்த்தமாய் நாளும் ஆடும் பொய்கையை உடைய ஊர், மாசிலாத பதி. மறை விளங்கும் பதி. உலகினில் நீண்ட காலமாய் உள்ள ஊர். புகழ்விளங்கும் பதி. கலைவல்ல புலவர்களுடைய இடரை நீக்கும் கொடையாளர்கள் வாழும் ஊர். சிறியோர் அறிவுமிக்க விருத்தரை அடி வீழ்ந்து வணங்குங் தலம். தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் அவர்களை விரும்பி எதிர்கொள்பவர்கள் வாழும் தலம். நண்ணிவரும் நாவலர்கள் நாடோறும் புகழை வளர்க்கும் ஊர். நீதி நிறை செல்வர்கள் நித்த நியமங்களை விதிப்படி அநுட்டிக்குங் தலம். பாவத்தை விடுத்தார் மிகவாழுந் தலம். கலையும் பல மறையும் அற நெறியும் நிரம்பினவர் வாழும் ஊர். வினையில்லவர் வாழும் ஊர். அழுதும், விழுந்தும், எழுந்தும், ஆடியும், பாடியும் தொழும் பக்தர்கள் வாழும் ஊர். பொழிலில் வித்தகர் வாழும் ஊர். கற்பகத் தருபோன்ற கொடையினர் வாழும் ஊர். அழகிய மாதர்கள் விளங்கும் அழகு நிறை ஊர். மயில், மான், மதி, இளவேய், வெயில் இவைகளே நிகர்க்கும் மாதர்கள் வாழும் பதி. பண் என்ன மொழிபெற்ற மாதர்கள் பாலகரைப் பாராட்டும் ஒசையைக்கேட்டு விண்ணவர்கள் வியப்படைந்து தத்தம் விமானத்தோடும் கீழிறங்கிக் கேட்குந் தலம். திருவுற்ற அந்தணர், பூசுரர், மறை முறையுணர் மறையவர், மெய்ம் மொழியே பேசும் நான்மறையோர், வித்தக மறையவர், நான் மறைவல்ல வேதியர், திறல்மிக்க வேதியர் வாழும் பதி, விரும்பும் பதி, வழிபடும் பதி. வித்தகரும், மறையொலி மிகுபாடலை இசையுடன் உரைப்பாரும் வாழும் ஊர். பிரம்மனை நிகர்க்கும் வேதியர்தம் வேத ஒலி நீங்காத தலம். கலியைவென்ற வேதியர்கள் வாழும் ஊர். கீத இசையோடும் கேள்விப் பெருக்குட