பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தேவார ஒளிநெறிக் கட்டுரை இரப்போர்க்குப் பொய் சொல்லார். அப் பெரியார்க ளுக்குச் செய்யாள் (லக்ஷ்மி) பக்கத்திலேயே இருப்பாள். (எனவே,) முதுகுன்றைத் தியானியுங்கள், கித்தலும் கைதொழுங்கள். விரும்பிச் (சென்று) காணுங்கள். 190. முல்லைவாயில் தென் :-காவிரியின் வடகரை யில் உள்ள தலம். சங்கையும் இப்பியையும் கடல் ஒதம் மோத முத்துக்கள் தெருவில்வத்து அலைகொள்ளும் ஊர். (பொழிலில்) காழையும், வகுளமும் அரும்பும். புன்னே வாசம் வீசும், குன்றும் குன்றும், குலையுங் குலையும், கொடியுங் கொடியும் குழுமிச் செறியும். கழனியும் சோலையும் கலக்கும். கமலங்கள் தங்கு மதுவில் தேனைப் பருகி வண்டு பாடும். செந்நெல் வயலிற் சேலும் வாளையும் குதிகொள்ளும். மானுலவும் கொல்லையில் மயில் வந்து உலவும். குயிலேறு சோலையில் உள்ள மாமரத்தில் வண்டேறிக் களிக்கும். மாடங்களில் மேகம் தோயும். இத்தலமானது மாதர்கள் ஆடும் அரங்கின் கோபுரங்களும் பொன் செவ்வி வாய்ந்த மாடங்களும் இலகுக் தலம். எக்காலத்தும் நெல் வளத்தாற் சோறளிக்குங் தலம். தேவி-கோதை யம்மை. 191. முக்கீச்சரம் :-(வேல் வல்ல அழகிய) சோழன், (சீர்பெற் றிலங்கிய) பாண்டியன், (அழகிய வஞ்சிநகர்த் தலைவனும்) சேரன் மூவரும் சேர்ந்த கலம், மூவரும் (பணி) செய்த தலம். இவர்கள் மூவரும் மூக்கீச்சாத்து அடிகளே (ஆண்டருளும்) செல்வர் (அவரே பரம்பொருள்) என்னும் உணர்ச்சி கொண்டு இறைவனை வழிபடும் பொருட்டு (சம்பந்தப் பெருமான்) பாடிய பதிகம் இத்தலத்துப் பதிகம். 192. வக்கரை :-வானும் பிறையும் தோயும் o பொழில் சூழ்ந்த தலம். சுவாமி சந்திரசேகரர். அவரு டைம் அருளைவேண்டி இந்திரன் முதலிய இமையோர்கள் தொழுது இறைஞ்சும் பதி இத்தலம். இறைவன் உறையும் திருப்பதி. திருவக்கரையில் அமரும் பிரான் கழலையே சிந்தியுங்கள் ; செப்புங்கள்.