பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 1871 அரிச்து உருட்டிய சக்கரத்தைப் பெறவேண்டி அன் புடன் வழிபட்ட திருமால் இறைவனைப் பூசிப்பதற்காக விண்ணினின்றும் கீழே இவ்வுலகுக்கு வரவழைத்த விமானம் (விண்ணிழி விமானம்) விளங்கும் ஊர். திருமால் ஆயிரம் பூக்கொண்டு பூசிக்கவேண்டித் தனது கண்ம்லரை இட்டு அருச்சிக்க இறைவன் அவருக்குச் சக்கரம் ஈந்த பெரும் பதி. - | -- I (iv) தலவழிபாட்டின் பயன்:-திருவிழிமிழலையை கினேய வல்லவர் அடியார் இணக்கம் பெறுவர் ; லக்ஷ்மீக ரம் பெறுவர் ; பகைவர்க்கு ஒரு சிங்கம்போலத் திகழ்வர்;. அழகு நிரம்பப் பெறுவர், ஞான ஒளிபெறுவர், செங் நெறியிற்சேர்வர், கொடையாளராய்த் திகழ்வர், பிரமனைப் போலப் பொலிவர், புகழ்மகளின் துணைபெறுவர், மன்மதனப்போல ஒளிபெறுவர், சனங்கள் ம கி ழ விளங்குவர். மிழலை யீசன் திருவடிக்கு அன்பர் துன்பிலர். மிழலே நாதரை விருப்புடன் மேவ வினை நம்மை மேவாது. அவரைச் சிந்தைசெய்பவருடைய தீவினைகெடும். அவரைச் சித்தம் வைத்தவரே மெய்த் தவத்தவ ராம் ; அவர் திருவடியை கினைப்பவருக்கு யாதொரு துன்பமும் இல்லை; அவர் திருவடியைத் தொழுபவருடைய மேல் வினை. நாடொறும் கெடும் : அவர் திருவடியை உளங் கொண்டவரை உளங்கொண்டவருடைய வினை உடனே நீங்கும் ; அவர் திருவடியைச் சிரத்திற் பூவெனக் கொள் பவரது புகழ் உலகிற் பரந்தோங்கும். அவர் திருவடியிற். பூ வும் புனலும் துவுவோர் நன்மை யடைவர். அவர் அடியார்களுடைய பாவத்தை நசிப்பர் ; இன் பங்கொடுப் பர். மிழலை இறைவனைத் தொழக் குறையில்லை. விழிமிழலை யார் என வல்வினை மாயும் ; விழிமிழலையான் என வினை கெடும். இறைவன் நாமம் நமச்சிவாய' என்பதைச் செ ால்வோர் நல்லவர். திருவிழிமிழலை நாதர் தம்மைத் தொழுது ஆடிப்பாடுவார் சிந்தையுட் சேர்வர். தம்மை யன்றிப் பிற அறியா அடியவர்களுடைய சிங்கையுள் மன்றுவர். திருவிழிமிழலை யிசனை ஏத்தவல்லவருடைய வினோசமாம். திருவிழிமிழலை அடைபவரே அடியவர்.