பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.188 தேவார ஒளிநெறிக் கட்டுரை அத்தலத்துக்கு அடியார்கள் கலந்து ஆருவாக்கள். திருவீழி மிழலையை அறிந்தவர் துன்பம் அறியார். அத் தலத்தைத் தமதாக நினைவாரும், புகழ்கேட் டுணர்வாரும் உயர்வார். அத்தலத்தை உளங் கொள்பவருடைய வினை ஒயும்; உணர்ந்தவருடைய தீவினை தேயும். அத் தலத்தைத் தொழ வல்லவர் செய்வதே தொண்டு ; அவமே நல்லர் : அத்தலத்தைப் பரவும் அடியாரே அடியார். அத்தலத்தை கினையாதவர் நெ ஞ் சம் நெஞ்சல்ல. மிழலைப் பெருமானே ! உம்மைப் புகழ்வதே -Զ|ԵՔG5. உம்மை அறிபவர் விருப்பொடு துதிப்பர். உம்மை உணர்பவர் ஞானக்கண் பெறுவர். உம்மைப் போற்று வோர் பக்தர்கள் ; உம்மை ஏத்துவோர் புலன்களை வெல்வதைப் பொருளாகக் கொள்ளுவர். அடியிர் புதுமலரிட்டுத் தொழுது உய்ய ஈசன் உறையும் கோயில் விழிமிழலைக்கு வம்மின் ! தன்சரித்திரம்:-(சமணரை வாதில்வெல்ல) என்னைச் சிறிது மதித்து வருவித்த ஈசனே 1 மிழலையீர்! ஏசலுக்கு இடமில்லாமல் குற்றமற்ற காசினைக் கொடுத்தருளும். 211. வெண்காடு :-கடலுங் கானலும் விளங்கும் ஊர். விண்ணளாவும் பொழிலில் கானலுக்கு அருகே ஞாழலும், செருந்தியும், புன்னேயும், தாழை வெண் குருகும் தயங்கும். அருவியில் வெண்முத்து அலைபடும். வெள்ளைச் சு ரிசங்கு உலவித் திரியும். பொழிலில் வண்டு பாடும் ; மயில் நடமாடக் கடல் முழங்க வண்டு இசை முரலும். வெண்டாமரைமேற் கருவண்டு யாழ் வாசிக்கும். முடத்தாழை மலரின் கிமுலேக் கடத்து நீரிற்கண்டு. குருகென்று கினைத்துக் கெண்டை மீன் தாமரைப் பூவில் மறைவதைக் கண்டு முத்தம் நகைப்பதுபோலக் கதிர் வீசும். தாமரையில் அன்னம் மருவும். பண்மொழியால் இறைவன் நாமம் பல ஒதுங் கிளிகள் பனைமரத்தில் வீற்றிருக்கும். வேதத்து ஒலிகேட்ட கிளிகள் சொற்கள்