பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. திருஞான சம்பந்தரைப் பற்றிய விஷயங்கள் 199' முயல்வது, தவம். அவரை வணங்க, அவர் மழபாடியை வணங்க, அவர் திருவடியைப் பேணத் தவமாம். சம்பந்தப் பெருமான் பாடிய தமிழில் வல்லவர்களுடைய அடியைப் பேணுதல் தவ மாம். தவநெறி வேண்டில் திருப்பருப்பகம் பரவுக, சிவபுரம் வழிபடுக, தேவாரம் கற்க-ஒதுக. பழிப் பாய வாழ்க்கை ஒழியத் தவஞ் செய்யத் தக்க இடம் கடந்தை. அத்தலத்துத் தூங்கானை மாடத்தைத் தொழு மின்கள். திருவிழிமிழலையைச் சித்தம் வைப்பவர் மெய்த் கவர். பாதிரிப்புலியூரை வணங்குந் தவமில்லிகள் பிணி யாக்கையைப் பெறுவார்கள். தூபம், தீபம், பாட்டு, அவி, மலர் சேர்த்து இறைவன் திருநாமங்களை நாவினில் ஒதுபவரே தலைப்படுத் தவத்தோர். 92. திருஞான சம்பந்தரைப் பற்றிய விஷயங்கள் [248—257] (1) பெயர் (248 (20) :-சம் பக்தன், ஞான சம்பந்தன், ஞானன், திருஞான சம்பந்தன், பங் தன்என்னும் பெயர்களால் தம்மைக் குறித்துள்ளார். அவர் இருந்த ஊர் காரணமாகவும், அவர் அழகு, குணம், வ. நிலை. கோக்கிரம் மிம் -- லி அறிவு, , கோததாம, தமிழஞானம முதலய காரண மாகவும் வந்துள்ள அவர் பெயர்களுட் சில கீழ்வருவன :அணிகொள் சம்பந்தன், அந்தமில் ஞான சம்பந்தன், அழகார் சம்பந்தன், இசைஞான சம்பந்தன், இணையில் சம்பந்தன், கலைஞான சம்பந்தன், கவுணியன், கழுமல நகரிறை, காழிக்கவுணியன், காழி ஞான சம்பந்தன். காழிப் பூசுரன், கொச்சை வேந்தன், சண்பையர்கோன், சங்கங்கொள் சம்பந்தன், சிரபுரக்கோன், தமிழ் ஞான சம்பர்கன், தமிழ்விரகன், தோணிபுரத் தலைவன், நல்ல கேள்வி ஞான சம்பந்தன், நலஞான சம்பந்தன், நிகரிலி, பழுதில் ஞான சம்பந்தன், பிரமபுரத் தலைவன், புகலின் திருஞான சம்பந்தன், புறவ நன்னகர் மன்னன், பூந்த + + o " - - + ாய்ப் பங்கன், பொன்னி நாடன், மறைஞான சம்பந்தன், முறையான ஞானமுகிவன், முத்தமிழ் விரகன், மெய்ஞ்