பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தேவார ஒளிநெறிக் கட்டுரை



28 அடியார்க்கு இறைவன் அருளுவது [6 (1)]:- அன்பொடு வழிபடும் அடியார்களுக்கு இறைவன் நீழல் போல் இருப்பான், அருநெறி காட்டுவான், பக்தியைத் தருவான், அவர்கள் இடுமலரை அன்புடன் ஏற்றுக் கொள்ளுவான், அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வரு வான், அவர்களுக்குத் தமது திருவடி நீழலைத் தருவான், மங்கை ஒருபாகமாகத் தோன்றி வந்து அருள்புரிவான். இறைவன் திருவடிகள் தாம் அடியார்களைக் காத்தருளுகின்றன. எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு முக்கட் பெருமானார் அருள்புரிவார்.
1. விண்ணுலகம் அளித்தல் [6 (2)]:- சிவபெருமானார் தமதடியவர்க்கு விண்ணுலகம் எளிதில் அளிப்பார்.
2. அன்னம் அளித்தல் [6 (3)]:- தமது அடியவருக்கு அன்னநிதி யாவார்.
3. ஆசைதீர அளித்தல் [6 (4)]:- அடியார்களுக்கு ஆசைதீரக் கொடுப்பார்.
4. ஆட்கொள்ளுதல் [6 (5)]:- பலவிதமாக அடியாரை ஆட்கொண் டருளுவர்.
5. இன்பம் அளித்தல் [6 (6)]:- தம்மைச் சார்ந்தவருக்கு வேண்டிய இன்பங்கள் தருவார்.
6. கோள், நாள் முதலிய நலியாவகை அருளுவர் [6 (7)]:- நாள்கள், கோள்கள், அவுணர், இடி, மின், பூதம், கடல், நமன், நமன்தூதர், காலன், அரி, உழுவை, யானை, கேழல், நாகம், கரடி, அக்கினி, வினை, சிறு தெய்வங்கள், மால், பிரமன், மறை, தேவர்கள், காலம், மலை, வெப்பு, குளிர், வாதம், பித்தம் இவையெல்லாம் சிவனடி யார்களுக்கு நல்லனவே செய்யும்.
7. தவநெறி யருளுவர் [6 (8)]:- அடியார்க்கு இறைவர் தவநெறியைத் தந்து அருளுவர்.
8. துயர் முதலிய தீர்த்தருளுவர் [6 (9)]:- அவலம், குற்றம், இடும்பை, இடர், இடுக்கண், துக்கம், துயரம், ஏதம், நடலை, அல்லல், ஊனம் என்பன அடியாரைப் பீடியா வண்ணம் அருளுவார்.