பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தேவார ஒளிநெறிக் கட்டுரை


தணைந்த இந்த அந்தகாசுரனைச் சிவபிரான் தேவர்கள் போற்ற மூவிலைச் சூலாயுதத்தாற் குத்தித் தூக்கினார்.

(ii) இடும்பன்:- திறல்வாய்ந்த சினமிக்க அரக்கன்.

(iii) இரணியாக்கன்:- மதமிக்க நெடுமுகன்.

(iv) இராவணன்:- தலைப்பு 161-பார்க்க.

(v) சலந்தரன்:- தவத்திற் பெரியான்; கருவமிக்கவன்; தன் வலிக்கு எதிர் ஒருவர் இல்லாதவன்; மண்ணுலகையும் விண்ணுலகையும் நலிந்தவன்; நெருப்பை உமிழும் சக்கரப் படையாற் சிவபிரான் இவன் உடலத்தைப் பிளந்தார்; தலை அறுந்துருளச் செய்தார்.

(vi) சூர் (சூரபத்மா):- மாயம் வல்லவன் ; முருகரால் அழிவுண்டான்.

(vii) தாரகன்:- தேவர்களுக்குத் துயர் செய்தவன்; போரில் வல்லவன்; வெற்றி நிரம்பியவன்; காளியாற் கொல்லப்பட்டான்.

(viii) மகிடன் (மகிடாசுரன்):- போரில் நீலி(துர்க்கை) யாற் கொல்லப்பட்டான்.

(ix) வாணாசுரன்:- (சிவசந்நிதியில்) முழவங் கொட்டும் பேறு பெற்றவன்.

6. அரசர்கள், பிற பெரியார்கள் [9]

அரசர்களுக்கு இலக்கணமாவன-அணி, அருள், கழல், குடை, முடி, யானை, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி, வட்டில் முதலியன. அரசர் பட்டண ப்ரவேசம் செய்யும்போது மணியொலி, சங்கொலி, முரசொலி ஒலிக்கும்.

2. அநுமான், அருச்சுனன், இமவான், இராமர், இலக்குமணன், கோச்செங்கட்சோழன், சாம்புவான், சிபி, சிலம்பன், சுக்கிரீவன், சேரர், சோழர்கள், தென்னர், தருமன், நந்தன், நளன், நாகராஜன், பகீரதன், பஞ்சவர், புரூரவா, மாவலி, வாலி என்பவர்களைப்பற்றிச் சுவாமிகள் கூறியுள்ளார்கள். இவர் தம்முள்:-