பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரியார்கள்

11

 (i) அருச்சுனன்:- இவனுக்குப் பதினொரு பெயர்கள் உண்டு. அப்பெயர்களுள் அருசசுனன், தனஞ்சயன், பார்த்தன் , விஜயன் என்னும் பெயர்கள் சொல்லப்பட்டுள. “பத்தொரு பெயருடை விஜயன்” எனப்பட்டுள்ளான். இவன் வில்லின் வல்லான், வேளுக்கு நிகரானவன், பஞ்சவரில் ஒருவன், அழகன்; பிற விஷயங்கள் “சிவனும் விசயனும்” [தலைப்பு 75] என்பதன் கீழ்ப் பார்க்க.

(ii) தென்னர், சேரர், சோழர்கள்:- முடிசேர் மன்னர்கள்; சோழன் தலைநகர் - கோழி; பாண்டியன் தலைநகர் - மதுரை; சேரன் தலைநகர் - வஞ்சி; வஞ்சி அழகுள்ள ஊர்; சோழன்கொடி - புலி ; பாண்டியன் கொடி - மீன்; சேரன் கொடி - வில்; ஆனை - சேரனது மலைநாட்டைக் குறிக்கும். சோழனுக்குச் செம்பியன், நேரியன், கிள்ளி, கோழிமன், வளவர்கோன் எனவும், பாண்டிய னுக்குத் தென்னன், தென்னவன், பஞ்சவன், வழுதி எனவும், சேரனுக்குப் பூழியன், வில்லவன் எனவும் பிற பெயர்கள் உண்டு. சோழன்-வேல் மிகவல்லான், மிக்க அழகுடையான், மண்ணெல்லாம் பரவ மிக்க பிரதாபத்துடன் மணிமுடி சூடி வாழ்ந்தான். பாண்டியன்-சீருடன் பொலிந்தான், பண்ணியல் தமிழ்க்கு உரியான் ; சேரன் - நீடு புகழான்; மூவரும் மிக்க அன்போடு திருப்பூவணம், மூக்கீச்சுரம் முதலிய தலங்களை வழிபட்டார்கள்.

(iii) இமவான்:- பொன்னியல் மலையான்; விண்ணுலா மால்வரைக்கு அரசன்.

(iv) இராமர்:- கடலை அடைத்து வழி செய்தவர்; வில்வலார், ஈனமிலாப் புகழார், இராவணனைச் செற்றவர், விஷ்னு அம்சத்தினர்.

(v) இலக்குமணன்:- இராமர் தம்பி.

{{gap}}(vi) சிபி:- புறாவுக்காக உடல்நிறை அருளினவர்.

(vii) சிலம்பன் (கேது?):- தலையாய்க் கிடந்து சீகாழியில் ஆண்டவன்.

(viii) சுக்கிரீவன்:- போருடையான்.