பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தேவார ஒளிநெறிக் கட்டுரை


(ix) தருமன் (யமன் ?):- பல்லுயிர்களின் செய்வினை தெரிந்து செங்கோல் செலுத்தினவன்.

(x) நளன்:- நள்ளாற்றிற் பூசித்தவன்.

(Xi) பகீரதன்:- அருந்தவம் புரிந்து இறைவனது சடைமுடிக் கங்கையைப் பூதலத்துக்கு வரவழைத்தவன்.

(xii) புருரவா:- திருவிழி மிழலையிற் பூசித்தான்.

(xiii) வாலி:- ராவணனை வாலினாற் கட்டினான்; திருக்குரங்காடுதுறையில் இறைவனை வழிபட்டான்.

7. அருவி [10]

அருவி மலையினின்று பெருகும்; பளிங்கு போன்ற வெண்ணிறத்துடன் திண்ணென வீழும்; முழவொலி போல முழக்கும்; பறைபோல ஒலிக்கும்; முரவம் என்னும் வாத்தியம்போல ஒலிசெயும். வழியில் உள்ள சுனைகளை நிரப்பிப் பரவும், தத்தும்; சலசல என நுரையுடன் ததும்பும்; தந்தத் திந்தத்தென்று பாய்ந்து செல்லும்; பனைத்திரள் போலப் புரண்டு பாயும்; யானையும் அஞ்சும்படி விரைவிற் பெருகும்; அகில், சந்தனம், நாகம், பளிங்கு, பொன், மரவம், மலர், மணி, முத்து, வயிரம் முதலிய பல பொருள்களை உந்திக் கொழித்து இழியும்.

8. (1) ஆறு [17]

அரிசொலாறு - அரிசில் [17 (1)]:- எப்பொழுதும் நீருள்ளது. மாதர்கள் இந்நதியில் நீராடுவார்கள். பொன், மணி, கனி, பீலி, ஏலம் இந்நதியின் வெள்ளத்தில் உந்தப்பட்டு வந்தன.

கங்கை [17 (2)]:- ஆழ்கடல் போன்றது; பெயர்பெற்றது; ஒலிக்கும் வெள்ளத்தது; தெய்வநதி.

கம்பை [17 (4)]:- கச்சியில் ஏகம்பத்தில் உள்ளது. தேவி தவஞ் செய்தபொழுது பெருவெள்ளமாய் வந்தது.

காவிரி - பழங்காவிரி [17 (5)]:- அழகிய நதி , நீண்ட நதி ஒலிக்கும் வெள்ளத்தது; கங்கையை நிகர்த்