பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. (1) ஆறு

13

 தது. கடல் போன்றது; அழகிய கரையது. கரைகளில் மலர்ப்பொழில் நிறைந்தது; கொங்கு நாட்டிற் பொலிவது; பூச ஸ்நாநத்துக்கு விசேடமானது; தன்னிற் படிவோரது இடர் தொலைப்பது; என்றும் நீர் உள்ளது; பெருமை வாய்ந்தது; மலையினின்று இழிவது; செந்நெல் விளைய வளப்பந் தருவது; அகில், இஞ்சி, இலவம், இலவங்கம், இலை, ஈஞ்சு, ஏலம், கனிவகைகள், கழை, காட்டுப் பண்டங்கள், குருந்து, சந்தனம், சாதிப்பழம், சுரபுன்னை, சண்பகம், செருந்தி, ஞாழல், திமில், தேக்கு, தேன், பூகக்குலை, பொன், மஞ்சள், மணிகள், மயிற் பீலிகள், மருது, மலர்கள், மலைப்பண்டங்கள், மிளகு, முத்துக்கள், யானை மருப்பு, 'மல்லிகை, மாதவி, முல்லை, வயிரத்திரள், விளவுதேன், வேங்கை இவைகளை உந்தி வரும் வெள்ளத்தது.

கெடிலம் (17 (7):- அகில், சந்தனம், மலர்கள் இவைகளை அடித்துக் கொண்டுவரும் தெண்ணீர் நதி.

கோட்டாறு [17 (8)]:- நீண்ட கோணிய நதி , மாதர்கள் குடைந்தாடும் ஆறு; இலவம், ஏலம், களிற்றின் மருப்பு, கனிகள், பீலி, பொன், மலர்கள், மிளகு இவைகளே வெள்ளத்தில் அடித்து வரும்.

நிவாநதி [17 (9)]:- பொன், மணி, மலர் இவைகளை வெள்ளத்தில் உந்திவரும் நதி, குளிர் புனலது.

பம்பை [17 (10)]:- அகில், சந்தனம், பொன், மணி இவைகளைக் கொழிக்கும் நதி.

பெண்ணை [17 (18)]:- இடையிடை வரைகளைக் (கற்பாறைகளைக்) கொண்டது. வளப்பங் கொண்டது.

மண்ணி [17 (14)]:- அகில், சந்தனம், முத்தம் கொழிக்கும் தெண்ணீரது.

மணிமுத்தநதி [17 (15)]:- விசேட நதி; முழங்கொலி வெள்ளத்தது; குங்குமம், குரவு, சந்தனம், மணி, மலைப்பண்டங்கள், முத்து, மூங்கில்முத்து இவைகளை வீசி வருவது.