பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 250 தேவார ஒளிநெறிக் கட்டுரை வாழ்க்கை யொழியத் தவஞ் செய்வதற்குத் தக்க இடம் வேண்டில், பெண்ணுகடம் சென்று தொழுமின்கள். 132. பாடல்-துதி திடத்தித் கூறித் துதித்தல் (264(6) :-சங்கரனே! புண்ணியன்ே ! நீலகண்ட்ன்ே இடர்வரினும், தளர்ச்சி வரினும், வினை வரினும், துயர் உறிலும், பிணிவரினும், நோய் தொடரினும், உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், வாழினும், சாவினும், வருந்தினும், கனவிலும், கனவிலும், உன் திருவடியையே என் சிங்தை நாடும் ; உன் திருவடியையே எனது கா உரைக்கும். 133. பாடல்-பா வகைகள் (829-333) ஒலி, கலிக்கோவை, சக்கரம், சங்கம், செந்திசைப் பாடல், தொழிற்பாட்டு, பாசுரம், மாலை, மாவின் பாச்சல், வண்ணம், வழிமுடக்கு, வழிமொழி, விருத்தம்-என்னும் பா வகைகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. எழு கூற்றிருக்கை, ஏக பாகம், கூடசதுக்கம், கொம்பிலாப் பர்ட்டு, கோமூத்திரி, சக்கர்மாற்று, மாலைமாற்று, மொழி மாற்று, யமகம் ஆதிய சித்திரக் கவிகளையும், அந்தாதித் தொடை, (திரு) இராகம், திரு (இருக்குக்) குறள், சாடி, ஈரடிமேல் வைப்பு, தாளச் சதி, காலடிமேல் வைப்பு, இடைமடக்கு-முக்கால் ஆகிய பாவகைகளையும் காண லாகும். ஆசிரியப்பா போல அமைந்துள்ள பதிகங்கள் சில; கட்ட்ளைக் கலித்துறைபோல அமைந்துள்ள பதிகங் கள் சில ; சில பாடல்களிலிருந்து நேரிசை, இன்னிசை, சிந்தியல்-குறள் வெண்பாக்கள் அமைகின்றன. பாட்டுக் குள் பாடல்கள் (காந்துறை பாடல்கள்) சில பாடல்களிற் கிடைக்கின்றன. சில பாடல்களிற் சில எழுத்துக்களையோ சொற்களையோவிட வேறுவகைப் பாக்கள் வெளி வருகின்றன. இங்ானம் பல விசித்திரங்கள் சுவாமிகள் பாடல்களில் உள்ளன. மேலும், இறைவனுடைய இயல், உரு, கோலம்,தலம், நீறு, பெருமை, வீரம், என்பவற்றைக் குறிப்பனவும்,