பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தேவார ஒளிநெறிக் கட்டுரை நெஞ்சமோ, கவியிலக்கணம் அறியா அறிவோ, இசை கூடிய வகையில் ஏழை யடியார்கள் ஏத்த இறைவர் மகிழ்வர். மனம் ஒன்றிச் சிந்தையை இறைவனிடம் வைத்துத் துதித்தல் வேண்டும். அதுவே உண்மைப் பொருளை அடையும் உபாயம். சய சய எனத் துதி சொல்லிப் பூசித்தல் வேண்டும். கா.அவர் திருநாமங்களே ஒதப், பூவும் நீரும் கொண்டு பூசித்தல் வேண்டும். அங்கை தலைக்கேறவேண்டும் ; அஞ்சு புலனும் ஒடுங்குதல்வேண்டும்; திருநீறு பூசுதல் வேண்டும் , தலை வணங்கவேண்டும் ; இருபோதும், இரவும் பகலும், ஏத்துதல் வேண்டும் ; உணர்வால் உள்குளிர்ந்து மெய்யன்புடன் தொழல் வேண்டும் ; கதியருள் என்று கைகூப்பித் தொழவேண்டும் ; சாமி தாதை சரண் ” எனக் கூறிக் கலை சாய்க்கவேண்டும். (8) வழிபாட்டுக் காலம்.(348(2) :-இரவும், பகலும், எல்லியும் ஏத்துதல் வேண்டும். لئے | ந்தி சந்தியில் அர்ச்சனைகள் செய்யவேண்டும். காலையும் மாலையும் தொழுதல் வேண்டும். நாடோறும் முட்டின்றிப் பணி செய்யவேண்டும். கித்தலும் நியமங் தவருது மலர் கொண்டு வணங்கிக் கைதொழுதல் வேண்டும். பத்தியாக முப்போதும் பொற்கழலைப் போற்றுதல் வேண்டும். திருநீறு பூசி நித்தம் அதிகாலையில் தொண்டர் கூட்டம் கூடிப் பணிவர். விடாது பணிதல் அவசியம். மலர் கொண்டு இருபோதும் பணிக. - (9) பூஜைவேளையில் மனநிலை. (412) :-ஆவியில் ஐம்புலன்களையும் ஒடுக்கிப், பெருமான்யே உள்கி, அவருக்கே நாம் உரிமைப்பொருளாகி, கள்ளம், வஞ்சகம் இவை சற்றுமின்றி அவர் திருவடிகளில் சித்தத்தை. கிறுத்தி, நீர்-மலர் தாவித், தலை வணங்கி, உள் குளிர்ந்து பணிதல் வேண்டும். (10) பூஜையினல் வரும் பயன்.-(Au1):-ர்ே, மலர் கொண்டு காலையும் மாலையும் பணிபவருக்கு இறைவன் அணியர், இனியர், மலர் தூவிப் பூஜைசெய்தால் மனம்,