பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. பொழிலும் சோலேயும் 259 ஒடுங்கிப் பாழாகும் ; இறைவன் புலப்பட்டு எதிர்கிற்பன்; அருளுவன்." அலர் கொண்டு பூஜைசெய்ய வினை சிதைவாம், நோய் நலியாது, வரனகம் எய்தும், தீய கெம்ெ, பாசவினை கெடும். 139. பேய்கள். (346) (i) கழுது, ஆளி என்பன பேயைக் குறிக்கும் பிறபெயர்கள். பேய்களுள் கொள்ளிவாய்ப் பேய் கூறப்பட்டுளது. பேய்கள் காட்டில், இடுகாட்டில், சுடுகாட்டில், முதுமாத்தில் இருப்பன. பேய்கள் பாடும். அவை பறைபோல் விழியன, பகுவாயன, காவுங் கூந்தலும் விரிந்துள்ளன. பிணத் தசையை உண்பன ; பேய்கள் மனிதரைப் பிடிக்கும், பிரியும். ..(ii) பேயும் சிவனும் (347) :-சிவனும் பேயும் (74-ஆம் தலைப்பு)ப் பார்க்க. 140. பொழிலும் சோலையும் (351, (i) சோலைகள் :-இருண்ட்ன, நீண்டன, -վ ԵԲG5 வாய்ந்தன, கேன் நிறைந்தன, மலர் நிை றங்கன, குளிர்ந் திருப் ான, கிழல் பயப்பன, நறுமணம் வீசு வன, வானம் அளாவுவன, மகியைக் கடவுவன. மா, பலா, முதலிய இனிய கனிகள் நிறைந்தன. சோலைகளில் குயில்கள் கூவும், இசைபாடும்; மயில்கள் ஆலும்; கூகைகள் முரலும்; தென்றல் வீசும்; பழங்கள் விழும்: புன்கு பொரி சொரியும்; பெடையைப் புல்கி மயில் மாடம் ஆடும்; வண்டு மதுவுண்டு பாடும்; பண்முரலும்; மேகம் தவழும். . சொல்லப்பட்ட சோவலகள் :-கமுகஞ்சோலை, சாலி மலி சோலை, பூஞ்சோலை, பொழிற்சோலை, மலர்ச்சோலை. சோவலகளில் உள்ள மாங்கள், செடி, கொடிகள்:-கமுகு, ஆா, கொகுடி முல்லை, கோங்கு, செண்பகம், s - : ... == H H R செருந்தி, ஞாழல், தளவு, தெங்கு, பலா, புன்கு, புன்னை,