பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தேவார ஒளிநெறிக் கட்டுரை ருக்வேதப் பாடலும்) உகந்ததே. இறைவன் வேதம் ஒதுவர், வேதம் பாடுவர்; அவர் வேதம், விரித்தவர்; வேதம் வல்லவர்; கால்வருக்கு இருக்கு (வேதத்தை) உபதேசித்தார். வேகங்கள் இறைவனைப் போற்றும். திருமறைக் காட்டிற்பலகாலங்கள் வேதங்கள் இறைவனது பாதங்களைப் பூசித்தன. மயேந்திரப் பள்ளியிலும் பூசித்தன. நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட மெய்ப்பொருள் நாதன் நாமமாம் நமச்சிவாய' என்பதே. வேதமும் வேள்வியும் இறைவனுக்கு கன்குடை’’ எனப்பட்டுள. (4) வேதமும் வேதியரும் :- (864, 446(6)) நாலு வேதங்கள், ஆறங்கங்கள் இவைதமைக் கற்று இறைவனே வேத கீதங்களால் நாள்தோறும் தொழுதேத்தும் பெரியோர்கள் இருந்தார் கள். (5) வேதமும் கிளியும் :-(446(7)) பண்டிகர் கள் பல நாள் பயின்று வரும் வேக ஒசையைக் கேட்டுப் பழகிக் கிளிகள் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் ஊர்கள் திருவிழிமிழலையும் திருவெண்காடும் என அறிகிருேம். (6) மறையும் வேதமும்:-(446(5) மறையும்_வேதமும் பொதுவாக ஒன்றே."என நன்கு புலப்பட்ட போதிலும் - மறைகள் வேதம் விரித்தோதுவார் ' எனவும், பல வேதம்....மறை நான்கு..ஆர்ை ’ எனவும் ஒரே இடத்திற் கூறப்பட்ட போது மறை வேறு வேதம் வேறு போலத் தோன்றும்; அங்கனம் இரண்டும் ஒன்ருக வருமிடத்தும், பல மறை, பல வேதம் என வருமிடத்தும், வேதம் என்பது நான்குமறை அல்லாத அறிய வேண்டிய பிற வேதங்களையும், மறை என்பது நான்கு வேதமல்லாத பிற மறை பொருள்களையும் குறிகின்றன போலும். (i) அங்கம், ஆகமம் :-(447, 449) அங்கங்கள் ஆறு. இறைவரே அங்கங்களையும் ஆகமங்களையும் வகுத் கருளினர். ஆறங்கங்களின் பொருளாவார் அவரே.