பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. மறையும் வேதமும் 2? Ꭵ ..(8) மறையோர் சபை (869):-நான்கு வேதங்களை யும் ஆறு அங்கங்களையும் கற் றுணர்ந்தவர்கள் சபைகட்டி மகிழ்வார்கள். I (9) மறையொலி [366] :-வசனவரும், தானவரும், வேதியரும் மறையொலி முழங்குவர் ; வீடுகள்தோறும் மறையொலி முழங்கும். o (ii) வேதங்கள் (445) -வேதங்கள் ங்ான்கு. வேத சாகைகள் ஆயிரம். வேதம்-வேத சாகைகள் யாவும் இறைவன் அருளியனவே. பிரம விஷ்ணுக்கள் * சுருதியார் இருவர் ' எனப்பட்டனர். (i) வேத ஒலி (445(2)) :-வேதம் ஒதும் ஒலிக்கு கடலொலி உவமை கூறப்பட்டுளது. வேதமானது உள்ளங் கலந்து இசையுடன் ஒதப்படும். வேக ஒலி பொழில்களில் முழங்கும் திருவிழிமிழலையில் வேதிய ருடைய வேத ஒலி எப்பொழுதும் நீங்காது முழங்கிற்று. வேத ஒலியைக் கிளிகள் பயிலும். (2) வேதஞ்சொல்லிப் பூஜை (445(3)) :-பிரமன் ஆகிய தேவர்கள் கடலொலி போல முழங்கி வேத இசை பாடிப் புகுந்து பணிவர். வெண்மணலே சிவமாகப் பாவிக்கப் பட்டு வேதமந்திரங்களால் பூஜை செய்யப்பட்டது. வேதியர்கள் உரிய வேளையில் வேதம் ஒதி இறைவனை அலங்கரித்துப் பணிவார்கள்; பூசித்து வணங்குவார்கள் : ஆரணம் கொண்டு அடிதொழுவார்கள். (3) வேதமும் சிவனும் [361, 446) :-இறைவன் நான்கு வேதங்களையும் அவைதம் பொருள்களையும் அருளிச் செய்தார்; இறைவனுக்கு சாமவேதம பிரியமானதால், அவர் ' சாமவேதன் ' எனப்பட்டார் ; ராவணனும் சாமவேத கீதம் ஒதி இறைவனை மகிழ்வித்து அவரது திருவருளையும் அவரிடமிருந்து ஒரு வாளையும் பெற்ருன் : வேத நாவன், .ே வ த கீ த ன், வேதபுராணர், வேத முதல்வர், வேத விகிர்தர், வேதர், வேதர்ை-என இறைவர் பாராட்டப்பட்டுளார். இறைவனுக்கு இருக்கும்