பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

之?0 தேவார ஒளிநெறிக் கட்டுரை பூசுரர்-இவர்கள் மறைமொழிகொடு, மறையொலிகொடு, மறை பல சொல்லி இறைவன் மகிழ இருக்குமறையோதிப் பூசித்து ஏத்துவர். * (2) மறை படித்தல், 'யிலுதல் (859) :-மறை படித்தால் பாவம் தீரும் ; மறைவழியே கிற்ற்ல்வேண்டும்; மறை கூறிய வழியே புல்லைப் பரப்பிச் சமிதைகொண்டு வேள்வி யாற்றுவர், ஒமென்று தொடங்கி மறைபயில்வார். (3) மறையும் சிவனும் [361] :-இறைவர்மறைகளைத் தோற்றுவித்தார், ஆய்ந்தார், தொகுத்தார், விரித்தார்; ஆகமங்களை வகுத்தார், சமயங்களே வகுத்தார்.அங்கங்கள், நான்மறைகள், அறம் பொருளின் பயன்கள் இவை தமை’ நால்வர்க்கு வெளியிட்டு அருள் புரிந்தார். இறைவரே மறையின் பொருள். அவரே மறை வல்லவர். மறை காலுமே அவர்தம் திருப்பாட்டு. அவர் மறை ஒதுவர், பேசுவர், பாடுவர். கிரிபுரமெரிக்க நாளில் மறை அவருக்குப் புரவி யாயிற்று. ராவணனுக்கு இறைவன் காட்டிய கருணையை மறைகள் பாராட்டும். (4) மறையும் பூவையும் கிளியும் (368) :-மறைகளை ஒதக்கேட்ட கிளிகளும் பூவைகளும் தாமும் மறை யோதும்; மறையோ துவதிற் பிழைகள் இருப்பின் பழகின கிளிகள் அப்பிழைகளைத் திருத்தும். | (5) மறை பூசித்த தலங்கள் [371] :-மறைகள் திரு மறைக் காட்டிலும் (வேதாமணியத்திலும்) திருவெண் காட்டிலும் இறைவனே வழிபட்டன. (6) மறையும் பூதமும் (362) :-தம்மைச் சுற்றியுள்ள பூதங்கள் மறைப்பாடல்களைப் பாட இறைவர் ஆடுவர். (7) மறையும் மறையவரும் (864, 446(6)) :-மறை கள், அங்கங்கள், கலைகள் இவையெலாம் வல்ல செல்வர்கள் இருந்தார்கள்; அவர்கள் நள்ளிருள் யாமத்திலும் மறை சொல்லி எரியோம்புவார்கள்; பூஜை செய்தபின் ஒழிவுள்ள வேளையில் மறைகள் பேசிப் பொழுது போக்கு வார்கள், மறைகொண்ட கீதங்களைப் பாடுவார்கள்; மறையொலி, மந்த்ர வேள்வி நீங்காத ஒழுக்கத்தினர்கள் ; நாளும் மறையோதும் வழக்கத்தினர்கள்.