பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. மறையும் வேதமும் 369。 முளிகள் கொண்டது. பெருமை, விருது வாய்ந்தது ; வரித்தபொழுது சிவபிரான் இதை வளைத்து வில்லாகத் திருக்கையில் ஏந்தினர். குறிப்பு :-றுரீ கிருஷ்ண பகவான் மழையைத் தடுப்iசுற்காக ஏந்திய மலையும் சொல்லப்பட்டுளது. 145. மழை-மின்-இடி-மேகம் (856) (1) இடி :-பலத்த ஒசையது. ஆதலால் இது பலத்த் ஒசைகளைக் குறிக்க வருஞ் சொல்லாயிற்று. (2) மழை :-இளமழை, பருவமழை, பெருமழை என வகைப்படும். விண் பொய்க்க மழை விழாதொழியும். (8) மின் :-மின்னனது விண்ணில் முகிலில் தோன்றும். சுடர்க்கொடிபோல ஒளி வீசும். (4) மேகம்:-கார், காரி ைர், கொண்டல், கொண்டலார், புயல், மங்குல், மஞ்சு, மழை, முகில், முதிர்ம், வான்-என்பன மேகத்தைக் குறிக்குஞ்சொற்கள். மேகம் பொழில்களில் தவழும், அதிரும். மலைமேற்படியும். வெண்மேகமும் உண்டு, காளமேகமும் உண்டு ; மேகம் குளிர்ச்சி தரும், நீர் பொழியும், பயிர்களுக்கு உதவும். மின்னலுக்கு இருப்பிடம் (5) மேகமும் சிவனும் :-சிவனே உலகுக்கு மழை யளித்து உலகை உய்யச் செய்பவர். அவர் சடையில் மேகங்கள் அமர்ந்துள்ளன. 146. மறையும் வேதமும் (857-866; 45.457) (i) மறைகள் (857) :- மறைகள் நான்கு: , அவை பழையன; அங்கங்கள் கொண்டன; கடவுளைப் பற்றிப் பேசுவன; அறநெறிகளைக் காட்டுவன; அரிய நெறிகளை விளக்குவன, நலமலிவன ; பங்கமிலாதன ; பழியிலாதன; பண் நிறைந்தன ; பொய்யாதன ; மாரு தன. மறைப் பொருள்கள் எண்ணில; இருக்குமறை தொன் மையது. (1) மறை சொல்லித் தொழுதல் (858) - பி ம ன், மார்க்கண்டர், பிறமுகிவர்கள், வானவர், தானவர்,