பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தேவார ஒளிநெறிக் கட்டுரை யூர், கலிக்காமூர்-என்னுங் கலத்திலுள்ள சிவபிரானே நண்ணி அவர் திருவடிகளை யேத்திப் பணிக. மார்க் கண்டருக்காகச் சிவபிரான் காலனே உதைத்தது-56(3) தலைப்பைப் பார்க்க. H 158. யாக்கை, பிறப்பு, வாழ்க்கை [383] H A. (i) காயம் :-மாய காயம் ; இரை வேண்டிகிற்கும்; பிணிபடும்; திரை, நரை வரும்; வான், தீ, காற்று, நீர், கிலம் எனனும பஞ்ச பூதததாலானது: இயினுக்கு உறவு; எலும்புக்கழி, இறைச்சிமண், புலால்தோல், பொல் லாமை உச்சி, வாயில்கள் ஒன்பது கொண்ட ஒரு மனை; கிணம், குடல், நரம்பு முதலியன கன்னகத்தே கொண்டது. (ii) வாழ்க்கை :-அல்லலுக்கு இடம் ; இழிப்புக்கும், சலிப்புக்கும், பழிப்புக்கும் இடம்; நிலையிலாதது. ஐம் புலன்களின் சேட்டைக்கு உட்பட்டது. பிணி, மூப்பு, மரணம் இவையுடன் கூடியது. பாம்பின் வாயில் அகப் பட்ட தேரை யொன்றின் வாயில் உள்ள ஒரு சிறு பறவை யானது பூந்தேனைச் சுவைத்து இன்புறலாம் எனக் கருதுவதற்கு நிகராகும் இவ் வாழ்க்கையில் நாம் இன் புறக் கருதுவது. கூற்றுவன் நமது ஆருயிரைக் கொள்ளை கொள்ளப் பார்த்துக் கொண்டே யிருக்கின்ருன். ஆத லால், பிறன்கடை வாயிலிற் காத்தல், பல்வகைய பிணி யிற் படல் முதலிய வாழ்க்கைத் துக்கங்கள் நம்மைப் பீடியா வண்ணம் இறைவன் திருவடியைப் பற்றி நாம் உய்தல் வேண்டும். (iii) மூப்புவர்ணவன :- உடம்பு மூத்தால் பல்விழும்; நா தளரும்; மெய் வாடும்; தோல் திரையும்; ஆடு போல நரைகள் தோன்றும், உரையும் பாட்டும் தளர்வெய்தும்; ஏகம் மிகும்; இருமல், ஈளை, சூலை, குன்மம் முதலிய நோய்கள் பீடிக்கும் ; செவி கேட்பிலா தாகும் ; கண் நோக்கு இழக்கும் : கன்னிர்மை குன்றும்.