பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தேவார ஒளிநெறிக் கட்டுரை லோதத்தால் மோதப்படுவதால் திருமுல்லைவாயில் தெருக்களில் முத்துக்கள் அலையுண்ணும். முத்துக்கள் வெண்ணிலாப்போல ஒளிவீசும். திரைகள் ஒன்ருே டொன்று ஒடிப் பகைத்து மோத சங்கமும் வங்கமும் கரை வந்து சாரும். மலைபோன்ற மரக்கலங்கள் சரக்குடன் இடையிடை வரும், (14) கமுகு-கலப்பு-148-(5)-பார்க்க (15) கயல்:-கலைப்பு-180-II-(5) (iii) பார்க்க. (16) கரும்பு-தென்றல் அடிவருடக் கண் வளரும். (17) காந்தள்:-தலைப்பு-143-12-பார்க்க. (1 8) காவிரி-காவிரிக் கால்களில் மணியும் முத்தும் பொன்னும் அடித்துவரும். சக்து, அகில், பெருமரம். இலவங்கம், மாணிக்கம், மற்றும் மலைவளங்கள் யாவையும் ஆர்த்தடித்துப் பாய்ந்து காவிரி வெள்ளம் மண்டி சலசல எனப் பெருகிவரும். I (19) கிளி.-கலப்பு-180-III-(S)-பார்க்க (20) குயில்:-கலைப்பு-180-III-(9)-பார்க்க. (21) குரங்கு:-க ருங்குங்கும் கடுவனும் பாய்ந்து போர் புரிய மான் அச்சம் கொள்ளும். ஆண் குரங்குட ன் கோபித்த பெண் குரங்கு தனது கைம் மகவை ஏந்திக் கொண்டு மூங்கில் மீது பாயவேண்டிக் கரிய மலை மிசை ஏ.றம். சேற்று நீரிற் கயலும் இளவாளையும் சண்டை யிடுவதை வேடி க்கைப் பா ர்த்துச் செ ம்முக மந்தி கடுவனெடு திரியும். முழவொலியைக்கேட்ட சில மந்திகள் மழை வரும் என அஞ்சி மாத்தின் மீதேறி மேகங்களைப் பார்க்கும். மந்தி கூத்தாட வண்டு பாடும். மந்திகள் தென்னஞ் சோலையிற் புகுந்து வாழைக் கொத்துக்களை இறுத்து மாமரத்தின்மேல் எறும். மேகங் கவிய பொழில் களில் மந்திகள் கூடி நீண்ட மூங்கில்களின் மீதேறி மேகத்தைத் தொட முயலும். பொழில்களில் மந்திகள் பாய்வத்ால் தேன் திவலைகள் சிந்தும். கமுகின் இளம் பாளையில் வாய் வைத்து மதுவையுண்டு மந்திகள்