பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 தேவார ஒளிநெறிக் கட்டுரை இனிமைக்கு உவமை கூறப்பட்டுளது. வண்டு ஆாழ் வாசிப்பது போலவும் குழல் வாசிப்பது போலவும் ஒலிக்கும்; பாலையாழ்-முல்லை யாழ் கூறப்பட்டுள. (xw) வீணை:-கீதம் இசைக்கும். பண் பொலியும். தேச ஒலி பொலிவிக்கும். (2) அரசர் வருகை :-அரசர்கள் கூடலைப்போன்ற தலை நகரிற் புகும் பொழுது மணியொலி, சங்கொலி, முரசொலி முழங்கும். (3) மாதர்களின் ஆடல் பாடல்:-மாதர்கள் நடனம் செய்யும்பொழுது தண்டு (வீணை வகை),உடுக்கை, தாளம், தக்கை, நடனத்துக்கு ஒத்துவர வாசிக்கப்படும். கொட்டு வாத்தியத்தில் வல்லவர்கள் முரவம், முழவம் கொட்டு வார்கள். மாதர்கள் பாடும்பொழுது தாளமும் வீணையும் முழவும் மொங்தையும் ஒலி செயும். மாதர்கள் யாழ் வாசித்துப் பயிலுவார்கள். (4) பூஜை வழிபாடு:-காலையி லும் மாலையிலும் குழல், சங்கு, துங்துபி, முழவு, யாழ் ஒலிக்கும். தென்மொழி, வடமொழி, திசை மொழிப் பாடல்கள் காப்புக் கருவி களுடன் ஒதப்படும். i (5) திருவிழாக்களில்:-குழல், கொக்கரை, பறை, முழவு, மொந்தை-வாசிக்கப்படும் I (6) வாத்தியமும் சிவனும் -சிவபிரான் ஆடும்பொழுது இடக்கை, கத்திரிகை, குழல், கொட்டு, சங்கு, சல்ல்ரி, தக்கை, தாளம், துடி, தத்திரி, படகம், பறை, முழவு, மொந்தை, யாழ், வீணை முதலான ᏞᎫ óa இயங்கள் ஒலிக்கும். நந்தி முழவங் கொட்டுவர். சிவபிரான் பாடும்பொழுது குழல், கொக்கரை, தாளம், பறை, .மொந்தை, வீணை உடன் ஒ லி க் கு ம் و هLDLP) சிவபிரானது கையில் பறை, பேரி, வீணே உள. அவர் சங்கிதியில் இடக்கை, குழல்,கொக்கரை, கொடு கொட்டி, சங்கு, தண்டு, தண்ணுமை, தாளம், பறை, (ԼԲէքճ|, மொந்தை, யாழ் வாசிக்கப்படும். அவருக்கு உகந்தது கல்லவடம்.அவர் சங்கிதியில் வாணன் முழவு வாசிப்பான்.