பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 தேவார ஒளிநெ றிக் கட்டுரை மேடைகளில் மாதர்களும் மைந்தர்களும் ஏறி இறைவன் புகழைப் பாடித் துதிப்பார்கள். மாதர்கள் ஆடல் புரிவார்கள். மறையோர் கூட்டம் நிறைந்து பொலியும். தெருவெலாம் விழாவின் ஒலிபெருகி கிற்கும். கார்த்திகை நாளில் பெண்கள் விளக்கிட்டு அலங்காரம் செய்வார்கள். விழாக்களில் திருநீறு பொலியும். அடியார் இறைவன் புகழைப் பண்ணுடன் பாடிப் பின்செல்வர். வேதவொலி முழங்கும். மாதர்களின் பாடலொலி நிரம்பும். தேர் முதலிய விழாக்கள் மிக்க சிறப்புடன் நடைபெறும். திருவிழாக்கள் பொழில்களிலும் நடைபெறும், அதல்ை பொழில்களில் இடிபோல முழவோசை மல்கும். கூட்டம் அதிக்மாயிருக்கும். விசேட நாள்கள் தோறும் திருவிழா கட்த்தப்படும். அட்டமி நாள், ஆதிரை நாள், ஏழ்விழவு, 'ஐப்பசி ஒணவிழா, கார்த்திகை விளக்கீடு, திங்கள் நாள் விழா, ள்ள் விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், பருவநாள் விழவு, பெருஞ் சாந்தி, பொற்ருப்பு, ம்ாசிக், கட்லாட்டு முதலிய உற்சவங்கள் சுவாமிகள் காலத்திற் பிரபலமாயிருந்தன. மயிலாப்பூரில் இத்திருவிழாக்கள் நடந்தன. திருவீழிமிழலை .ே ப - ன் ற பெரிய தலங்களிற் சதா திருவிழா நடைபெறும். அம்பர் முதலிய 37 கலப்பதிகங்களில் திருவிழா நடை பெறுவதைச் சுவாமிகள் குறிப்பித்துள்ளார். விவரம் தேவார ஒளிநெறியிற் காண்க.சில விழாக்களின் விவரம்: (i) ஏழ்விழா :-ஏழுநாள் நடைபெறும் போலும். பொழிலில் நடைபெறும் ; அருக்கன் (சூரியன்) முதலான தேவர்களும் கும்புகூடித் தொழுவர். இவ்விழா சிகாழியில் நடைபெற்றது. (ii) திங்கள் நாள் விழா :-(திருநெல்வேலியில்) கடந்தது. அப்பொழுது டிறையவர் கூட்டமும் அரிவைwiர் ஆடலும் மல்கின. (iii) தேர்விழா:-அன்று தெருக்களே அலங்கரிப்பர்; நறுமணம் வீசச் செய்வர் ; நீண்ட மாடவீதியில் தேர் வரும் ; அப்பொழுது சங்கம், படகம் ஒலிக்கும்.