பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$10 தேவார ஒளிநெறிக் கட்டுரை 5. பன்றியாயும் பறவையாயும் உருவங் கொண்ட இருவரும் (மாலும் அயனும்) வான் அளந்தும் பூமியை இடங்தும் உன்னைக் காணுது ஒலமிட, அவர்கள் மிகவும் அஞ்சும்படி நீ ஆாழலாய் கின்ற பெருங்கோலப் பெருமையின் விளக்கமென்ன? பின்னர், அவர்கள் போற்ற அவர்களுக்கு அருளிய பான்மையின் விளக்கம் என்ன ? 6. கங்கை நங்கையை ஏன் சடையிற் குடி புள்ளாய் மங்கை ஒருத்தி பாகத்திலே இருக்க அவள் வாடி ஊடும்படிக் கங்கையைச் சடையில் அடைவித்த காரணம் யாது ? 7. கண்கள் மூன்று கொண்ட காரணம் என்ன? 8. காட்டில் வாசம் என் விருப்புடன் கொண்டாய்? 9. காதில் அணியாகக் குழையும் கோடும் ஒக்க விளங்குவ தெங்கனம் ? 10. மால், அயன், இந்திரன் அஞ்சும்படியாகக் காமன் வெண்பொடியாக ஏனே கடைக்கண் சிவந்தாய் ? 11. கல்வி, வேள்வி, ஞானமாக நீ ஆயதின் காரணம் யாது ? 12. கையில் மானும், கரியபாம்பும், வெண்மழுவும் வீணையும் ஏன் வைத்திருக்கின்ருய்? I 18. பொன்னிறக் .ெ கா ன் ைற ைய ஏனே சூடுகின்ருய் ? 14. சடை மீது ஆறு, மதி, பாம்பு இவைகளை ஏன் அணிந்துள்ளாய்? சடையிற் பிறையையும் பாம்பையும் உடன் வைத்த காரணம் யாதோ ? 15. தாதையைக் கோபித்து அவன் தாளைத் தடிந்த சண்டேசுரருக்கு உனது மாலையைச் சூட்டித் தலைமை வகுத்தாயே அதன் காரணம் என்ன ? .* 16. எல்லாம் உனது தலமாக இருக்க, உருத் திரனே! நீ துருத்தியில் அடங்கிவாழ்வதென்ன காரணம்? (துருத்தி-ஒரு தலம், தீ ஊது கருவி). கூடல் ஆலவாயில்