பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 தேவார ஒளிநெறிக் கட்டுரை படத்தை உடையது, படத்திற் புள்ளிகளே உடையது, ஐவாயை உடையது, கோடுகளைக் கொண்டது,மணியைக் கொண்டது, வ்ளேந்த பற்களைக்கொண்டது, விஷத்தை உடையது, வெங்கண் கொண்டது, கோபங்கொண்டது, கொல்லுங் குணத்தது, நீண்டுள்ளது, வேகமாய்ச் செல்லுவது. நாகம் உமிழ்ந்த மணி சுடும். குழல், யாழ் முரலும் இன்னிசையால் புற்றில் பாம்புகள் ஒன்றுகூடும், கரும்பாம்பு உண்டு ; மிளிரும் பொன்னிறப் பாம்பு உண்டு; ஐந்து படங்களுடன் கூடிய பாம்புகள் உண்டு; புள்ளிகள் உள்ள பாம்புகள் உண்டு; பெரிய யானையை விழுங்கக்கூடிய பாம்புகளும் உண்டு. பாம்பு உமிழும் மணி கரிய இருள்ே விலக்கிப் பேரொளியை வீசும். பாம்பின் விரிபடம் :-காங்கள் மலருக்கு உவமை. படங்கொண்ட நாகம் :-கோடல் மலருக்கும் மாதர் அல்குலுக்கும், தேவி (பார்வதியின்) அல்குலுக்கும் *Đ- &7)J#) LL}. i. பாம்பின் முள் எயிறு :-குரவம் அரும்புக்கு உவமை. உலகைச் சுமக்கும் ஒரு பாம்பு. கிரிபுரம் எரித்த போது நாணுக அமைந்தது ஒரு பாம்பு. திருமால் பள்ளிகொள்வது ஒரு பாம்பின்மேல்; அந்தப் பாம்பு ஐவாயது, அழல்வாயது, படங்கொண்டது, பொறி வாய்ந்தது, பைங்கண்ணது, மணி கொண்டது, வெந்தொழிலது. திருப்பாற்கடல் கடைய கயிருயது ஒரு பாம்பு; அந்தப் பாம்பு விஷாக்னி வீசுவது, சினம் மிக்கது, பரிய உருவது, பொறி வாய்ந்தது, ஒளி கொண்டது. சிவபிரான் அணிந்துள்ள பாம்புகளைப்பற்றி வேறிடத்திற் கூறப்பட்டுளது (தலைப்பு 37-4 பார்க்க.) II நீர்வாழ்வன-சேற்றில் வாழ்வன (461) 1. ஆமை :-கருகிறத்தது, சேற்று நீரில் இருக்கும். இதன் அகடு (வயிறு) கிலாப்போல வெண்ணிறத்தது. சிவபிரான் அ ன ங் த ள்ள ஒட்டுக்குரிய ஆமை (கூர்மாவதார ஆமை)-அழகாமை, ! இளஆமை, முற்ற