பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 தேவார ஒளிநெறிக் கட்டுரை மறையும். கெண்டை மடுவிலும் வயலிலும் பாயும். கெண்டை பாய்வதால் சுனையில் நீலமலர் (நீலோற்பலம்) மொட்டு அலரும். மாதர்களின் கண்ணுக்குக் கெண்டை உவமையாகக் கூறப்பட்டுளது. (w) கெளிறு :-கெளிறுடனிருந்து மணல் கெண்டி நாரை விளையாடும். - (wi) சுரு :-சுரு கடலிலும், கழியிலும் இருக்கும். கடல் அலைகளிற் சுரு.அலேபட்டுக் கரைக்கு வரும். குருகு சுறவ மேய்ந்துண்ணும். -- - (vii) சேல் :-சேல், கயல், வரால், வாளை இவை வயல் நீரிற் பாயும், உலவும்; சேலும் வாளையும் வயலில் உலவும், பொருதல் செய்யும். செங்கயலொடு சேல்* செருச்செய்யும். சேலும் வாளையும் குதிகொள்ளும். கடலருகே சேல் மிளிரும். சேல் , களுவதால் நீலமலர் (நீலோற்பலம்) வளரும். தேவியின் கண்ணுக்கும் மாதர்களின் கண்ணுக்கும் சேல் உவமை கூறப்பட்டுளது. (wiii) மகரம் :-கடலில் வாழும். மகரக்கொடியோன் மன்மதன். (ix) மீன் (பொது):- மீன்கள் வயல் நீரிற் பிறழும். கழியிலும் திரையிலும் உலாவி உகளும். கழிக்கரையிற் கிடைக்கும் மீன்களை அமணர்கள் கவர்வார்கள். வலை யோடு மீன்களை வாரிப் பரதர் நாட்டில் எங்கும்கொண்டு வந்துசேர்ப்பர் மடுக்களில் மீன்பாய அங்குள்ள செழுங் கமலம் தேன் பாய மொட்டலரும். நாரையைக் கண்டால் மீன்கள் இரிந்து ஒடு ம். பள்ள மீன்களை இசை கொள்ளப் பறவைகள் உழலும். (x) வரால்-கரு நிறத்தது; க ய லு ட னு ம் சேலுடனும் வயலிற் பாயும், உகளும், குதிகொள்ளும்; வாளையுடனும் கயலுடனும் நீரில் உலவும். கொள்ளம் பூதாரிற் பருவரால் உகளும் -என்றுள்ளார். (xi) வாவள:-பொய்கையில் வாளையுங் கயலும். மிளிரும், வாளைகள் நீளமாயிருக்கும். ம டு வி ல் விளையாடும். அரிந்த வயலில் தாமரை, தேன் சொரிய