பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. ஜீவராசிகள் 327 ஆடும். கடல் முழங்க மயில் நடமாடும். மேகம் முழவென முழங்க மயில் ஆடும். கடல் முழங்கும், வண்டு பாடும், மயில் ஆடும். வண்டு பாடும், மயில் ஆடும், புன்னே பொன் கொடுக்கும். வண்டு பாடும் மயில் ஆலும். மேகம் முழவென முழங்கும், வண்டு பாடும், மயில்கள் பல நட்மாடும். பொழிலில் தோகை மயிலாட வண்டு பாடும். மயிலாலக் குயில் கூவும். மயில் தனது பெடையைப் புல்கி மா நடம் ஆடும். பெடையைப் புல்கி மயில் கூட்டங்கள் ஆடும், ஆலும் ; பொழில்களில் மயில் கோதும். பொழில்களிலும், மலைச்சாரல்களிலும், மாளி கையின் குளிகையின் மேலும் மயில்கள் ஆலும். மயிலும் குயிலும் அன்னமும் கிளியும் பொழில்களில் ஆலும்; மாகர்குரலுக்கு உவமை கூறப்பட்ட பறவைகளுள் மயில் ஒன்று. மாதர்களின் சாயலுக்கும், இயலுக்கும், தேவி யின் சாயலுக்கும் இயலுக்கும் (தோகை) மயில் உவமை கூறப்பட்டுளது. தேவியின் நடைக்கும் மாதர்களின் 1டைக்கும், மயில் நடை உவமை. திருப்புத்துார் என்னுங் தலத்தில் மயில்கள் தெருக்கள் தோறும் இன்புற்று உலவின எனக் கூறப்பட்டுளது. மயில் முருக பிரானது ஊர்தி. மஞ்ஞை, கலவம், கலவை, தோகை-மயிலின் ിയ്ക്കു பெயர்கள். .* IV விலங்குகள் (468) (1) அரி (சிங்கம்):-மலைக் குகையில் வ ா ச ம் செய்யும், மலைச் சாரலில் திரியும். இடி முழக்கத்தைக் கேட்ட சிங்கம் தானும் குமுறும். அறையும் சிங்கத்தின் இடிபோன்ற குரலைக் கேட்டு யானே அஞ்சி இரிந்து ஒடி மனம் பயங்து குகைகளிற் பதுங்கும். குகையினில் து.ாங்கிக் கொண்டிருந்த சிங்கம் அமைதியற்றுக் தோபித்து எழுங்கிருப்பதைக் கண்ட யானே இரிதரும். கான் உள்ள இடத்திற் சிங்கம் இரத்தத்தைப் பரப்ப . யானை அதை உணர்ந்து ஒடி ஒளியும் யானையின் மத்தகத்தில் (அறைவதால்) சிங்கத்தின் நகங்கள் மத்த சக்திற் புகுவதால் முத்துக்கள் உதிரும். யானையின்