பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 தேவார ஒளிநெறிக் கட்டுரை (19) பறவைகள் :-குளிர்ந்த பொய்கை மாட்டுப் புள்ளினங்கள் உலவும்: கமுகம் பழத்தை இரவிலும் துகரும். மாமரத்திலிருந்து காய்கள் கவனெறிகற் போலச் சுனையில் விழப் பறவைகள் தி இ ைர சேர இரியும். பறவைகள் பொழிலில் துயில் கொள்ளும். தாமரை மேற் புள்ளினங்கள் வைகி யெழும். சிறு பறவைகள் (ஈ முத லிய) தேரையின் வாயில் அகப்பட்டிருக்கும் பொழுதும் பூவில் உள்ள நறுக்தேனைச் சுவைத்து இன்புறலாம் என ஆசையுடன் கருதும். (நாரை போன்ற) பகுவாய்ப் பறவைகள் பள்ளங்களில் உள்ள மீன்கள்ை இரையாக உண்டுழன்று நாடோறும் பொழில்களைச் சேரும். பறவைகள் தத்தம் பெடையொடும் விளையாடும். பொய்கைகளிற் பூவும் புள்ளும் பொலியும். நாரை, குருகு போன்ற பறவைகள் பசுங்கோட்டுப் புன்னை மத்தில் தங்கும். பொய்கையில் கயல் பாயப் புள் இரியும் ; மலர்கள் விரிவதால் புள் இரியும், முரலும் பறவைகள் இசை செய்யும். கருடன் வெல்பறவை எனப் பட்டுளது. மாதர்களின் மொழிக்கு மயில், குயில், கிளி (மொழிகள்) உவமை கூறப்பட்டுள. புள்ளினம் பூசித்த தலம் பூந்தராய் (காழி). பறவைகள் தூதுக்கு உரியனவாக எடுக்கப்பட்டுள; 60, 821 எண்ணுள்ள பதிகங்களைப் பார்க்க. I (20) பூவை :-அழகிய வாயை உ ைட ய து. சொன்னதை அறிந்து சொல்லும் அறிவை உடையது. துாதுக்கு உரிய பறவைகளுள் ஒன்று. குளிர் பொய்கை மாட்டுச் சேரும். கூடங்களில் வளர்கின்ற பூவைகள் நல்ல மறைகளை ஒதும். மடந்தையர் பூவைக்கு(இறைவன்) புகழைப் பாடச் சொல்லிக் கொடுப்பார்கள். (21) மயில்:-வசீகரச்சோதியும் அழகும் உடையது. இதன் பீலி தழைத்திருக்கும். தோகை வீச்சு உடையது. பீலியில் சேல் போன்ற கண்களின் உ ரு வ'ம் நிறைந்துள்ளது. மேகங் கவிழ்ந்த பொழில்களில், மயிலின் ஆடல் மலியும். பேரி முழங்கில்ை மேகமுழக்க மெனக் கருதிக் களித்துச் சோலைகளில் உள்ள மயில்கள்