பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 . தேவார ஒளிநெறிக் கட்டுரை (11) குரங்கு :-ஊகம்.கருங்குரங்கு; கருவிரல்களே உடையது. முசு-கரியமுகத்தை உடைய குங்கு. மந்தி செம்முகம் உடையது (i) குரங்குகள் பலா, மா, வாழை எனப்படும் முப்பழங்கவள உண்பது:-கரு முசுக்கள் பழம் நிறைந்த மரங்களில் ஏறி மூங்கில்மேற் பாயும். குரங்குக் கூட்டங்கள் பொழில்களில் உள்ள மரமீதேறிப் பழங்களை உண்டு நீரில் விளையாடும். கருமந்திகள் கூட்டமாகச் சென்று பலப்பல கனிகளை நிரம்ப உண்டு மலையகம் அதிர விளையாடும். கோபம் மிஞ்சின மந்தி மரத்திலேறிப் பழங்களைச் சிந்தும். மந்தியும் கடுவனும் சோலையில் உள்ள பலவிதப் பழங்களையும் உண்ணும். மந்திகள் கிளைகிளைகளாய்ப் பாய்ந்து கீறி உண்டு உதிர்த்த பலாப்பழங்களைக் கடுவன் உண்டு குதிக்கும். மரங்களில் ஏறி மாம்பழங்களையும் பலாப்பழங்களின் சு ளை க ளை யு ம் றிே முசு தினந்தோறும் தன் இனத்துடன் உண்டு குதிக்கும். நறுமணங் கமழும் பலாப்பழங்களை பலாமரத்தில் ஏறிக் கொண்டுவந்து மந்தி உண்டு குதிக்கும். தித்திக்கும் மாம்பழத்தை பறிக்கக்கொம்பைத் தாழ்த்தும். வாழைப் பழந் தின்னுங் கருத்தொடு மேலே வாழைக் கனிக் குலையைப் பார்த்துக்கொண்டே மாத்தினின்றிறங்கும். மலைச்சாரலில் தன் மகவுடன் வந்த மந்தி வாழைக் கனிக் குலையை உண்ணும். குள்ள மந்தி தாறுடைய வாழை மாத்தின் கனிகளை உண்டு தன் இனத்துக் குரங்குகள் விலகி ஒடப் பாயும். (ii) குரங்குகளின் கூத்தும் விளையாட்டும் :-ம ந் தி யும் ஊகமும் மலையகத்தே குதித்து விளையாடும் ; மலர்ச் செடிகளில் உள்ள மலர்களே உதிர்க்கும்; பொழில்களில் மந்திகள் பாய்வதால் தேன் துளி சிந்தும். பழமுள்ள மாங்களில் ஏறிக் கருமுசு மூங்கிலிற் குதிக்கும். காவிரித் திரையை உந்தி எதிர்வரு மந்தி மலர்களைச் சிந்தும். மலைச்சாரலிற் கருவிரல் ஊகமும் கடுவனும் மான்கள் . அச்சமுறக்குதித்து விளையாடும். குரங்குகள் கூட்டமாய்ப் பயிலும். கடுவனெடு ஊடிய மந்தி தன் மகவைக் கையில்