பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 180. ஜீவராசிகள் 33 fo எந்தி மூங்கிலிற் பாய மலைமீதேறும். சேற்றருகே கயலும் இளவாளையும் சண்டை செய்ய அதனைப் பார்த்திருக்கும் மந்தி மலைச்சாாலில் தன் ஆனெடு திரியும். மந்திகள் தென்னை மரங்களின் இடையே பாய்ந்து வாழைக் கொத்துக்களை அறுத்து மாமரத்தின் மீது ஏறும். கமுகம் பாளையில் பாயும் மதுவை வாய் மடுத்து மந்தி குதித்தாடும். மந்தி பாய்வதால் பூக்கள் சுரேலெனச் சொரிந்து மணம் வீசும். மந்திகள் கிரிந்து கொண்டே இருப்பதால் மந்தி போல் திரிந்து என உவமை கூறிப்பட்டுளது. குரங்குகள் மரங்களிலேறி மடுக்களிற் பாயும். மந்தி குதி கொள்ளுவதால் மாம் பழத்திலுள்ள தேன் கிழியும் வண்டு கீதம் பாடினுல் மந்தி அதைக் கேட்டுக் கூத்தாடும். வாழைப் பொழில் மந்திகளுக்கு உகந்த இடம். மூங்கில் வளர் சாால்களில் ஊகங்கள் விளையாடும். மலைச்சாரல்களில் மந்திகள் வந்து கூத்தாடும் மலைகளில் உள்ள நீண்டுயர்ந்த மூங்கில்கள் வளையப் பாயுங் கடுவன் நீண்ட மூங்கிலின் மேல் கிருத்தம் செய்யும்; அதைக் கண்டு வேடுவர் தம் இனத்தாரைக் கைமறித்தும் கூவியும் அழைப்பர். திருகல் மூங்கில் சிறிதே வளைவதால்.அதிகமாய் வளையாத கால்சிறு மந்திகள் இள மூங்கில்மேல் இருந்து கடம் செய்யும். (iii) குரங்கும் மேகமும்:-மேகங்கள் கவிழ பொழில் களில் மந்திகள் கூடி மூங்கில் மேலேறி மேகங்களைப் பற்றிப் பார்க்கும். மழை வருதலைக் கண்ட மந்தி தன் மகவுடன் மலைக் குகையிற் புகும். மாதர்கள் நடமாட, முழவம் அதிர, மழைதான் வந்து விட்டதென்று அஞ்சிச் சில மந்திகள் மனங் கலங்கி மரங்களிலேறி மேகத்தைப் பார்க்கும். (iv) குரங்கும் பூஜையும் :-வகைவகையான மலர்கள் பல கொண்டு வந்து மந்தி கிருமுதுகுன்றில் தொழுது விண்ங்கியதாகக் கூறப்பட்டுளது. மந்தி-கடுவன்-இரண்டும் திருவலிதாயத்தில் பூசித்து வணங்கின - என்பதும் தெரி கின்றது. ஊகம், கடுவன், கோகிலம், திரங்கல் முகவன், மத்தி, முசு- இவை குரங்கின் பெயர். முகத்தில் திரை