பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தேவார ஒளிநெறிக் கட்டுரை

17. ஐந்தெழுத்து [42]

‘நமச்சிவாயத் திருப்பதிகம்’ என்றும். ‘பஞ்சாக்கரத் திருப்பதிகம்’ என்றும் இரண்டு திருப்பதிகங்கள் உள. ஐந்தெழுத்தைப்பற்றி வேறு மூன்று பாடல்களிலும் சொல்லப்பட்டுள. ஐந்தெழுத்தை ஒதியும் போற்றியும் உய்ந்தவர்:- பிரமன், மால், ராவணன், வண்டோதரி, குலச்சிறை நாயனார். பிற விவரங்களுக்குத் தலைப்பு 48-பார்க்க.

18. ஐம்புலன், பொறி, ஐவர்சேஷ்டை, ஐம்புலனை அடக்குதல் [43]

ஐம்புலன்களாகிய ஐவரும் நமது காயத்தில் நின்று நம்மை ஒருவழிப்போக ஒட்டாமற் செய்கின்றார். பத்தி வழியினின்றும் நம்மைப் பேர்த்து விடுகின்றனர்; இந்த ஐவர் ஆட்டத்தை அடக்கி யாள்வதே பெரியோர்களின் இலக்கணம். ஐம்புலன்களும் ஐந்து களிறு (யானை); தொண்டர்கள் இறைவனுக்குப் பூமாலை கட்டும்பொழுது இந்த ஐந்து களிறுகளையும் அடக்கி மாலை கட்டுவர்.

19. ஒற்றுமை [சொல் பொருள்- திரும்பி வந்துள்ள] அடிகள் முதலிய [49]

சிற்சில இடங்களில் ஒரே சொற் பிரயோகம் திரும்பி வந்துள்ளது. 88-ஆம் பதிகம் (திருவாப்பனுார்) இரண்டாவது மூன்றாவது பாடல்களில் இரண்டு அடிகள் அப்படியே திரும்பி வந்துள்ளன.

20. கடல், கடல் சார்ந்தன [53]

கடலின் பிற பெயர்கள்:- அலை, அளக்கர், ஆர்கலி, ஆழி, உவரி, ஒதம், கலி, சாகரம், திரை, நீர், பரவை, புணரி, பெளவம், முந்நீர், வாரி, வாரீசம், வேலை.

கடல் வர்ணனை:-கடல் ஆழமுடையது, கருநிறத்தது, அழகியது, ஒலிப்பது, நீண்டது, பரவியது, பழமை