பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தேவார ஒளிநெறிக் கட்டுரை

படகுபோலத் தோன்றுபவன் : கடல் கடைந்த காலத்தே கடலினின்றும் தோன்றியவன்; தக்கனது வேள்வியில் இறைவனது காலால் தேய்க்கப்பட்டுத் தண்டனை பெற்றவன். சிவனது அட்ட மூர்த்தங்களுள் ஒருவன்.

சந்திரனுடைய பெயர்கள்:- அம்புலி, இந்து, இரவன், உடுபதி, எல்லி, சசி, சந்திரன், சோமன், திங்கள், நிலா, பிறை, மதி, மதியம்.

சந்திரன் வழிபட்ட தலங்கள்:- அனேகதங்காவதம், திருநாகேச்சுரம், மயேந்திரப்பள்ளி, மாந்துறை, மாற்பேறு.

31. (1) சமணர் (அக்காலத்திருந்த நிலை) [67]

ஆனைமலை முதலிய இடங்களை இருப்பிடமாகக் கொண்டவர் சமணர். ‘சேனன்’, ‘நந்தி’ என முடியும் பெயர்களைப் பூண்டவர். பிண்டி மரத்தை - அசோகவிருக்ஷத்தைப்-பேணுவோர்; அதனால் பிண்டியர் எனப்படுவர். கரிய நிறத்தினர்; உறி தூக்கு கையர்; குண்டிகைக் கையர்; சுரையோட்டை ஏந்திச் செல்பவர்; மயிலின் தழைப்பீலிகளால் ஆய பெரிய குடைகளையும், மயிற் பீலிகளையும் கையிற் கொண்டவர்; வேர்வை உற வெயிலில் திரிபவர்; ஊத்தை வாயினர்; மாசு மெய்யினர்; உடல் கழுவாதவர்; அரையில் உடையின்றித் தெருவில் திரிபவர்; அறவழி கூறுபவர்; குளியாது உண்பவர்; கையில் உண்பவர்; கண்கழுவா. முன்னே கஞ்சி உண்பவர்; அம்மணமாய் நின்று உண்பவர்; இளம்பெண்கள் எதிரில் நிற்கத் தமது தலைமயிரைப் பறித்துக் கையில் அப்பெண்கள் இடும் சோற்றுத் திரளை உண்பவர்; கடுக்காய், சுக்கு தின்பவர்; கடுக்காய்ப் பொடியை உடலிற் பூசுபவர்; பனை ஒலையால் ஆய தடுக்கு, பாய் இவைதமை இடுக்கித் திரிபவர்; அவைதமை உடுப்பவர்; மரணாவஸ்தை படுபவர்போலத் தலை பறிசெய்து தவம் புரிவோர்; புற்றேறிக் கடுந்தவம்புரிவோர். பொய் மிகுந்தவர்; பொய்த் தவத்தை மெய்த்தவமெனக்