பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31 (2) சமணர், புத்தர், சாக்கியர், தேரர்

27

கொண்டு நிற்பவர்; மொட்டையர்; மௌனம் சாதித்தல் முதலிய கடு நோன்பினர்; மதுநீக்கித் தவமுயல்வோர்; அமண் அழிப்பர் (சிலர்) (சிலர்) கழிக்கரை யருகிலுள்ள தமது பள்ளிகளில் இருந்துகொண்டு மீன் கவர்வார்; பொல்லா மனத்தினர்; விருது பகர்பவர்; வெஞ்சொலாளர்; எலித்தொழிற் பாட்டு, கிளிவிருத்தம் ஆகிய நூல்களை இயற்றினவர். இவர்களுள் சாவகர் (சைனர்களில் இல்லறத்தார்) சாவும் தருணத்தும் வாது செய்யும் இயல்பினர். சமணர்கள் ‘அருகர்’ எனவும் சொல்லப்படுவர்.

(2) புத்தர், சாக்கியர், தேரர் [68, 70]

புத்தர் [70]:- போதி விருக்ஷத்தை (அரச மரத்தை)ப் பேணுவோர்; போதியர் எனப்படுவர். பிடகர் எனவும் சொல்லப்படுவர். துகில் அணிபவர். போர்த்த மெய்யினர். மருதம்பூவைப் ‘புட்டத்தே அட்டிட்டுப் புதை’க்கு மெய்யினர்.

சாக்கியர் [68]:- உடை (சீவரம்) போர்ப்பவர்; பட்டாடை புனைவர்; கருநிறத்தவர்; கஞ்சி யுண்பவர்; கொடியர்; புறங்கூறுவோர்; வஞ்சகர்.

தேரர் [69]:- அறுவகையர்; இருந்துண்பவர், மண்டையில் (ஒருவகை மட்கலத்தில்) கஞ்சிகொண்டு உண்பவர்; குணமிலார்; மருதம் துவரூட்டிய உடையினர்; தீய கருமம் சொல்லுபவர்; கையில் மண்டை கொண்டு உழல்பவர்.

இவர்கள் உடுக்கக் கடுக்காய், மருதம் துவருட்டிய (சிவந்த) உடையும் உண்டு. பொன்னிறத்த (மஞ்சள் நிறத்த) சீவரமும் (உடையும்) உண்டு.

குறிப்பு:- சமணர், அருகர், சாவகர், பிண்டியர் என வருவன ஒரு சாராரைக் குறிக்கும்; இவர்கள் உடையிலார். புத்தர், பிடகர், போதியர், சாக்கியர், தேரர். இவர்கள் வேறொரு சாரார்; உடையுளோர்; புத்தர், தேரர், சமணர் என வருதலால் புத்தருக்குள் தேரர் வேறு ஆவார். குண்டர் சாக்கியர், சமண் குண்டர் என வருதலால் குண்டர் என்னுஞ் சொல் சமணர், சாக்கியரைக் குறிக்கும் பொதுச் சொல்.