பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தேவார ஒளிநெறிக் கட்டுரை

(3) சமணர், புத்தர் இவர்தம் குறைபாடுகள், சாஸ்திரங்கள், பழக்க வழக்கங்கள் [72, 74]

சமணரும் புத்தரும் புறங்கூறுஞ் செயலினர். அலர் தூற்றுங் குணத்தர், நல்லது அறியார். வேதம், அங்கம், வேள்வி இவைகளை நிந்தனை செய்தனர். வைதிக வழி அறியார். ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலார். அவர் உரைகள் நஞ்சினுங் கொடிய. அவர் கொண்ட நெறி பழமையதாயினும் துளங்கும் நெறி. அவர் கூறி வைத்த குறி பிழையது. அவர் நயமுக உரையினர். வேடிக்கைக் கதைகள் உண்டுபண்ணித் திரிவர். நீதிகள் பல சொல்லுவர். ஆனால் அந்நீதிகளைத் தம் நினைவிற் கொள்ளும் ஆற்றல் இலாதவர். அமணராயினோர் சைவர் தம் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லார். ஊன் நன்று என்பர் ஒரு சாரார்; தீது என்பர் ஒரு சாரார்; வேளை தவறாது உண்பார்; மூடிய சீவரத்தர் முன் கூறுண்டேற, சமணர் பின் கூறுண்டு காடி தொடுவர். புத்தர் பிக்ஷுக்கள் உச்சிப்போதின் முன்பே உண்ணுவர். 'உலகிற் பெரியோர்கள் உரைத்த மொழிகளைத் திருடி நீதிநூல் செய்பவர். எங்கு மில்லாததொரு தெய்வம் உளதென்று உளறிச் சமயங்கள் கண்டவர். பல் தருமங்களைச் சனங்களுக்குக் காட்டி அவர் மனத்தைக் கவர்பவர். போதியார், பிண்டியார் இருவர் நூலும் பொய்ந்நூல். இவர்கள் ஒதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார், நல்வினை நீக்கிய வல்வினை யாளர்.

(4) சமணர், புத்தர் சொல் பயனிலது என்னும் உபதேசம் [78]

சமணரும் சாக்கியரும் உலகின் அவலத்தை மாற்றகில்லார். அவர் சொற்கள் அவத்தமாவன, இந்திர ஞாலம் போல்வன, பயனற்றன, வீறிலாதன, நஞ்சினும் கொடியன, மெய்யிலாதன, பிழையுள்ளன; அவைதமை நினைக்கவும் வேண்டா. சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுங் குணமுடையோர், புறங்கூறுவர்; ஆதலால்