பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31 (5) சமணும் சிவனும்

29

அவச் சொல்லைக் குறிக்கொள்ளன்மின்; அவர் திறம் விட்டகலுமின்.

(5) சமணும் சிவனும் [78]

1. சிவபிரானது உள்ளக்கிடை:- அமணர், சாக்கியர், தேரர், புத்தர் இவர்களைச் சிவபெருமான் காய்ந்தார், அடக்கினார், அழித்தார். தம்மைச் சேர ஒண்ணாது அவர்களை மயக்குவித்தார். அவர்கள் உரைகளைப் பொய்யாக்கினார். அவர்கள் பெருமையை ஒழித்தார்.

2. சிவபிரானது அருமை:- அமணர், சாக்கியர், தேரர், புத்தர் அவர்கள் அறியா நெறியார் இறைவர். அவர்களால் என்றும் அறியப்படாத வேடத்தவர் அவர். அவர்கள் உணர்வுக்கு அரியவர், அவர்களுக்கு அயலார், அவர்களுக்கு வெளிப்படாதவர்.

3. சிவபிரானது தன்மை:- சமணர், தேரர் முதலானோர் உரைக்கும் புன்மொழிகளைச் சிவபிரான் பொருட்படுத்தார். வேடிக்கையாக விரும்புவார். அவர்கள் இழிவுபடக் கூறினும் தம் பெருமை குன்றாதவர். அவர்கள் சித்தத்தில் அணையார். அவர்களுக்கு அருள்செய்யார். அவர்கள் உரையை விலக்கித் தம்மைச் சரணென அடைந்தவர்களை வலிய ஆட்கொண்டு அவர்தம் உணர்வினுள் நிற்பார்.

4. சிவபிரானது பெருமை:- அமணர், சீவரத்தர் வாழ்ந்த இடமெல்லாம் சிவனதே. அவர்கள் தேடி வணங்கிய தேவர்கள் எல்லாம் இறைஞ்சும் பிரான் சிவபிரான்.

5. சமணர் முதலானோர் சிவபிரான் மாட்டிருந்த வகை:- சமணர் சாக்கியர் முதலானுேர் சிவபிரானே இறைவன் எனக் கொள்ளார், பேணார், போற்றார், ஓயாது இழிவுரை கூறுவர், நித்தம் பரிகசிப்பர். இறைவனது ஐந்தெழுத்தை நாடார்; இறைவனைப் புகழ்ந்து புண்ணியங் கொள்ளார்; மனத்தை வருத்தும் பொய்க் கதைகள் கூறிச் சிவபிரானை இழித்துப் பேசுவர்.