பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தேவார ஒளிநெறிக் கட்டுரை

6. சிவ ரகசியம்:- சமண் சாக்கியர் முதலானோரிடம் பொய்க் குவையை வைத்து அக்கள்ளத்தார்களை இறைவர் ஏன் ஆக்கினார்? அவர்கள் ஏன் இறைவரை அலர் துாற்றுதல் வேண்டும்?

32. சமயங்கள்; சிவனும், சமயங்களும் [79, 124 (82)]

இறைவரே ஆறு சமயங்களை வகுத்தனர். வேதம், ஆகமம், அறத்தொகுதி இவை தமை ஆறு சமயங்களும் தழுவி நிற்கும். திருநீறு சமயத்தாற் போற்றப்படுவது. அமண் சமயமும், புத்த' சமயமும் உளறுவோரால் உண்டாக்கப்பட்டன, தழுவப்பட்டன.

33. சரித்திரங்கள் [80]

1. கடல் கடைந்தது [80 (1)]:- பெரிய மலையை மத்தாக நிறுவி, நெருப்பை உமிழ்வதும், சினத்தையும் விடத்தையும் பொறிகளையும் உடையதுமான பெரிய பாம்பைக் கயிறாகச் சுற்றி, அசுரரும் அமரர்களும் சல சல என்று அலைகடலைக் கலங்கக் கடைந்தனர். அப்பொழுது (ஐம்)பூதமுங் கலங்க கொலைமலி வேக விஷம் எழுந்தது. அதைக் கண்டு தேவரும் அசுரரும் பயந்து சிதறுண்டு ஒடினர். சிவபிரான் அவர்களுக்கு நீழல் அளித்தனர்.

2. ராகு, கேதுக்கள்:- அமுதுண்ண வந்த அரவின் சிரத்தை அரி (திருமால்) அரிந்தனர். அறுபட்ட சிரங்கள் சிவனே சரணம் எனப் பரவ இறைவன் அவை தமைக் கிரகங்கள் (ராகு, கேது) ஆக்கினர். சிரங்கள் பரவின தலம் சிரபுரம் (சீகாழி).

3. (1) காவிரித்துறை காட்டிய திருவிளையாடல், (2) புறாவின் பொருட்டு உணவளித்த சிபிச் சக்ரவர்த்தியின் சரித்திரம், (3) வஞ்சகத்தால் உயிர் கவர்ந்த ஒருத்தியின் பொருட்டுப் பழையனூரார் அஞ்சிய கதை (திருவாலங்காட்டு நீலி கதை), (4)பாலனுக்கு (உபமன்யுவுக்கு)