பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34. சாதிகள், சாதி வழக்கங்கள்

31

இறைவன் பாற்கடல் ஈந்தது, (5) மச்சகந்தியைப் பற்றிய கதை ஆகிய சரித்திரங்கள் குறிப்பிக்கப்பட்டுள.

34. சாதிகள், சாதி வழக்கங்கள் [82]

1. ஆயன்:- ஆயன் தன் கையில் உள்ள குழலை ஊதிக் காணாது போன எருமையை ஏனைய எருமைக் கூட்டத்துடன் கூடும்படி வரவழைப்பான்.

2. கடைசியர்(வயலில் வேலை செய்வோர்):- கழனியிற் கடைசியர் பாடுவர், விளையாடுவர்.

3. குறவர்:- வேடர் என்பதைப் பார்க்க.

4. பரதர் (வலைவாணர்):- கடற்கரை யோரத்தில் இவர்கள் மனையிருக்கும். ஆதலால் இவர்களுடைய மனையருகில் சங்கு ஏறி முத்தம் ஈனும்; கடற் பொருள்களைச் சேகரித்து வலைவாணர் விலை பேசுவர். பாதர் வலையிட்டு மீன்வாரி பூமியிற் பல இடங்களிற் கொண்டுபோய் விற்பர். கடற்கரையில் வாழும் மாதர்கள் தாழை மடல் கொய்து களி கூருவார்.

5. வேடர், குறவர்:- எயினர், கானவர், குறவர், புனவர், மறவர், மறவாளர், வேடுவர் - இவை வேடர்களைக் குறிக்கும். இவர் வேடர் வகையினர் எனவுங் கொள்ளலாம். வேடர்கள் மலையிலும் காட்டிலும் வசிப்பவர்கள், கருநிறத்தவர்கள். பெரிய வில்லும் அம்புங் கொண்டுள்ளவர்கள், வெஞ்சொற் பேசுபவர்கள், போருக்குத் தயாரா யிருப்பவர்கள்; இந்தச் சிலை வேடுவர்கள் மலை வழிகளூடு வருவார்களாதலால், யானையும், புலியும், சிங்கமும் இவர்கள் வரும் வழிகளில் வருதற்கு அஞ்சும். பன்றிகள் பூமியை உழுது கிளைத்த இடங்களிற் கிடைக்கும் மணிகளை வேடர்கள் சேர்த்துக் குவித்து வைப்பார்கள். வேடர்கள் கூட்டமாய்க் கூடிக் கடவுளைத் தொழுவார்கள். சந்தன மரத்தின் வலிய சிறகால் தினையை விதைத்து விளைப்பார்கள். பன்றி, மான், கிளி, இவை தினைப்புனத்தில் தினையை உண்ணவர வேடமகளிர் மலைச்சாரலிற் கிடைத்த கனக மணிகளை வாரிக்