பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சித்தாந்தம்

பார்த்திப பங்குனி 1946 மார்ச்சு

மலர் 19 பக்கம்48 இதழ்3

மதிப்புரை

தேவார ஒளிநெறிக் கட்டுரை [1. சம்பந்தர்] [பக்கம் 336; விலை ரூபா 2-8-0] இது தணிகை மணி. ராவ்பகதூர். வ. சு. செங்கல்வராயப்பிள்ளை எம். ஏ. அவர்கள் இயற்றிய அரியநூல். இவர்கள் தேவார ஒளிநெறி என்னும் பெயரொடு தேவாரத்திற்குப் பெரியதோர் ஆராய்ச்சி எழுதத்தொடங்கி, திருஞான சம்பந்தர் பெருமானது தேவாரத்தை ஆய்ந்து, 466 தலைப்புக்களின் கீழ் விரிந்த ஆராய்ச்சி அகராதி எழுதி முடித்துள்ளார்கள். அது இன்னும் அச்சுக்கு வரவில்லை. அவ்விரிந்த ஆராய்ச்சியின் சாராம்சமான பொருள்களை உரைநடையில் தருவதே தேவார ஒளிநெறிக் கட்டுரையின் நோக்கம். இந்தக் கட்டுரையில், சம்பந்தர் தேவாரத்திலுள்ள விஷயங்கள், 181 பெருந்தலைப்புக்களின் கீழ்ப் பல உட்பிரிவுகளுடன் தரப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஆதாரமான தேவாரப்பகுதிகள் தேவார ஒளிநெறி என்னும் முதல்நூலில் காண உள்ளன. பக்தியுடனும், பொறுமையுடனும் பலவாண்டு நுணுகியாராய்ந்து உழைத்தாலன்றி இத்தகைய நூலைத் தொகுத்தலியலாது. சம்பந்தர் தேவாரங்களை நேராக ஓதிச் செல்வோர் எளிதிற் கவனித்தற்கியலாத பல விவரங்கள் இந்தக் கட்டுரையில் செறிந்துள்ளன. (உ-ம்) ‘நாமமும் நாம விசேடமும்’ என்னும் பெருந்தலைப்பின் கீழ், ‘திருநாமங்கள்’ என்னும் முதலாவது பிரிவு உள்ளது. அதில், இறைவனைப் பொதுவாகக் குறிக்கும் திருநாமச் சொற்கள் 953 என்றும், சிறப்பாகச் சிவபெருமானைக் குறிக்கும் சொற்களும் சொற்றொடர்களும் 1993 என்றும் கணக்கிடப்பட்டுள்ளன. இன்னும் பற்பல விவரங்களும் தரப்பட்டுள்ளன. தேவாரப் பொருளை அறிவோர்களும் விரும்பிப் படிக்கத்தக்க திந்நூல். இப்பெரிய ஆராய்ச்சியை, தமக்கேயுரிய பொறுமையுடன் செய்து நூல் வடிவிலுதவிய தணிகைமணி அவர்கட்குத் தமிழுலகமும் சைவ உலகமும்