பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தேவார ஒளிநெறிக் கட்டுரை

3. அக்கும் எலும்பும் ([184, 190]:- சிவபிரான் அக்குவடம் அரையில் அணிந்துள்ளார். பிரமன், மால் இவர்களின் எலும்பை ஆபரணமாகக் கொண்டுள்ளார். தலைமாலை பூண்டுள்ளார்.

4. பாம்பு [188]:- யாரும் விரும்பாப் பாம்பே சிவபிரானுக்கு அணிகலம். பாம்புகளை அவர் ஆரமாகக் கொண்டுள்ளார். நாகம் உடலில் தொங்கும். சிரசிற் பாம்பு, காதிற் குழையாகப் பாம்பு, உடலிற் பாம்பு, கையிற் பாம்பு, அரையிற் பாம்பு, அரைநாண் பாம்பு, காலிற் கழலாகப் பாம்பு- இங்ஙனம் எங்கும் அரவாபரணமே. நாகம் புண்டு ஆண் ,ை ஆம் ஆன்

இவர் பூண்டுள்ள பாம்பின் வர்ணனை:- அழல்வாய் நாகம், இள நாகம், கதநாகம், துத்திநாகம், பேழ்வாய் நாகம், பைம்மா நாகம், மாமணிய நாகம்; ஆடரவம், பெருங்காட்டிலரவம், பொங்கரவம். பொறிகொளரவம், மிளிரும் அரவம், வாளரவம், வளையெயிற் றரவம், கடு விஷ அரவு, கவர்தலை யரவு, நச்சரவு, பட அரவு, பை கொள் அரவு, பொன்னென மிளிரும் அரவு, வரியரவு, விரிதுத்தி யரவு, வெங்கண் வாளரவு.

சிவபிரான் அரையில் அணிந்துள்ள பாம்பின் வர்ணனை [97 (2)] :- ஆடரவம், ஐந்தலை ஆடரவம், கோளரவம், பையரவம், ஐவாயரவு, கடிகட்டரவு, கிளரிளமணி யரவு, சூறைநல்லரவு, நச்சரவு, படங்கொள் அரவு, பொங் கரவு, பொறிகொளரவு, பொன் மிளிரும் அரவு, மிளிரும் அரவு, வரியரா, விடஅரா, அழல்நாகம், அழல் ஐந்தலை நாகம், அழலார் விழிக்கண் நஞ்சுமிழ் நாகம் (திட்டி விடம் என்னும் பாம்பு), அளை வளர் நாகம், ஆடல் நாகம், எழிலார் நாகம், கவ்வழல்வாய்க் கதநாகம், சுடுமணி யுமிழ்நாகம், சுழல்வாயதோர் படமலி நாகம், பணங்கொள் நாகம், பல்லபட நாகம், பல்வளரு நாகம், புற்றில் நாகம், வேக நாகம், அழல்வாயதோர் பாம்பு, அளை பயில் பாம்பு, ஆடிளம் பாம்பு, படமல்கு பாம்பு, பை மிகுத்த பாம்பு, பொறிகிளர் பாம்பு, ஆடல் மாசுணம், நஞ்சுமிழ் மாசுணம்.