பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37. சிவபெருமான் சடையிற் சூடுவன

35

 சிவபிரான் தமது கோவண ஆடையின் மேலும், புலித்தோல் ஆடையின்மேலும் பாம்பைக் கச்சாகக் கட்டியுள்ளார்.

5. திருநீறு [193, 197]:- இறைவனுக்கு விருப்புள்ள சாந்தம் திருநீறே. அவர் அணிவது சுடலை நீறு. தமது திருமேனியில் எல்லா இடமும் திருநீறணிந்துள்ளார். அவர் அணிந்துள்ள திருநீறு வெந்த சாம்பல், ஒளிநீறு, கோதில் நீறு, கோலநீறு, சுடுநீறு, சுண்ண வெண்ணீறு, சோதிநீறு, தவளநீறு, தூவணநீறு, பால் புரைநீறு, பொன் திகழ் சுண்ண வெண்ணீறு, கொழும்பொடி, சால நல்ல பொடி, மாசில் பொடி, வண்ணவெண் பொடி, வெள்ளைப் பொடி எனப்பட்டுளது.

6. நூல் [200]:- இறைவன் திருமார்பில் அணிந்துள்ள வெண்ணூல் - நீறு துதைந்திலங்கு நூல், பொறி கிளர் பூண நூல், மின் போலும் புரி நூல், மின்னு பொன் புரி நூல், முப்புரிநூல், மூவிரு தொன்னூல்,-எனப்பட்டுளது.

7. அணிவன (பொது) [184-202]:- அக்குவடம், எலும்பு மாலை, பாம்பு, ஏன எயிறு, ஆமை, தோல், புரிநூல், மனவு (சங்குமணி), திருநீறு, கண்டிகை, தாழ்வடம், கொன்றைமாலை, சிவபிரான் அரையிற் கச்சும், வாளும் உண்டு.

8. அணிகள் [186]:- ஆரம், கழல், கிண்கிணி, குண்டலம், குழை, சிலம்பு, தோடு, நூபுரம்.

குழை:- அரவக்குழை, கனங்குழை, சங்கணி குழை, சங்கார்குழை, சுரிசங்க வெண்குழை, தாழ்குழை, தூயகுழை, தோடார்குழை, வார்குழை, வெண் குழை.

தோடு:- சங்க வெண்தோடு, விரிதோடு, வெண் தோடு, வெள்ளைத்தோடு எனப்பட்டுளது.

37. சிவபெருமான் சடையிற் சூடுவன [113-122]

சிவபெருமான் தமது சடையிற் சூடியுள்ளன:- கங்கை, கொக்கிறகு, தரளம், திங்கள், பாம்பு, மலர்கள், மேகம், வெண்டலைமாலை ; இவை தம்முள் :-