பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தேவார ஒளிநெறிக் கட்டுரை


1. கங்கை [118, 114]:- இது ஆழ்கடல் போன்றது; தெய்வநதி, புகழ்பெற்ற நதி, முதுநதி, வற்றாநதி, நீந்தலாகா வெள்ளத்தது. இதன் வெள்ளத்தைச் சிவபிரான் ஒரே சடையில் அடக்கி வைத்துள்ளார். கங்கா தேவியின்மேனி மின்னற்கொடிக்கு உவமிக்கப்பட்டுளது. உமாதேவிக்குக் கோபம் வரும்படிக் கங்கை நங்கையைச் சடையிடைக் கரந்த கள்வர் சிவபெருமான். தவஞ்செய்த பகீதரன் பொருட்டுச் சிவபிரான் கங்கையைப் பூமிக்கு இழியச் செய்தார். தமது சடையினுந் தாங்கினார். திங்களுக்கு அருகிற் கங்கையைச் சூடியுள்ளார். தீ நிறத்ததான சடையின் அழலை அவிக்க வந்த புனல்போலக் கங்கை விளங்கும்.

2. பிறை [117]:- இது சிவபிரானது குழற்சடை முடிமேல் நெற்றிக்கண்ணுக்கு நேரருகிற் சூடப்பட்டுளது. இது இளம்பிறை, பிள்ளைப்பிறை, கூன்மதி எனப்படும். இறைவர் இதனைத் தன் சடைமீது மலராகவும் கண்ணி (மாலை)யாகவும் அணிந்துள்ளார். இறைவர் காலாற் பிறை உதைபட்டது ; பின்னர் அவர் அருள்பெற்று அவர்தம் சடைமிசை விளங்கும் பாக்கியம் பெற்றது.

3. பாம்பு [118]:- சிவபிரான் சடையிலுள்ள அரவங்கள் இள அரவம், விஷ அரவம், படஅரவம், ஆடரவம், புள்ளியுடைய அரவம், செங்கண் அரவம், வெய்ய அரவம் என வருணிக்கப்பட்டுள்ளன. சடையில் மலைப்பாம்பும் உளது. இளந்திங்கள் முதிரும்படியாகவும், அச்சமுறும்படியும் பார்க்கும் அரவங்களைச் சிவபிரான் பூண்டுள் ளார் ; அவர் சடையில் அரவும் மதியும் விளையாடுதலும் உண்டு. (நேர்மையற்றுச் சாபமுற்ற) திங்கள், (கொல்ல வந்த) பாம்புகள், (ஆங்காரத்துடன் பொங்கிவந்த) கங்கை இவை யாவும் தூநெறி பெறவேண்டி அவை தமைச் சடையிற் சூடினார் சிவபெருமான்

4. வெண்டலைமாலை [121]:- உடைந்த வெண்டலை, வாடிய வெண்டலை, பல்லார் தலை (நகுதலை), விழியிலாத்தலை இவைதமைச் சிரமாலையாகச் சிவபிரான் அணிந்துள்ளார்.