பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38. சிவபிரானது ஆடை, உடை, போர்வை

37

38. சிவபிரானது ஆடை, உடை, போர்வை

1. தோலுடை[97 (12)]:- இறைவனது உடை - தோலுடை, புலித் தோலுடை, சிங்கவுரி, மானுரி; ஆடை- கல்லாடை, கோவண ஆடை, துன்னவண்ண ஆடை, புள்ளித் தோலாடை; உடை - கிறிபடும் உடை, கீளுடை, துணியாருடை; போர்வை - கரித்தோல் போர்வை, வண்ணப் போர்வை.

2. கோவணம் [97 (9)]:- ஈரிரு கோவணம், நால் விரற் கோவண ஆடை, ஐவிரற் கோவண ஆடை, சரி கோவணம், விரிகோவணம், வெண்கோவணம், துணிபடு கோவணம், துன்னம்பெய், கோவணம், வெள்ளிய கோவணம் எனச் சொல்லப்பட்டுளது.

3. மானுரி [97 (16)]:- இறைவர் உரித்த மான் - உழைமான், கருமான், கலைபுனைமான், புள்ளி மான், புனத்திளமான், மாகாயம் பெரியதோர் மான், மைஞ்ஞிற மான் எனப்பட்டுளது.

4. புலித்தோலாடை [97 (13)]:- சிவபிரான் அரையிற் புலித்தோல். அந்தப்புலி - உரவன்புலி, ஒளிறுபுலி, கான்வரி, நீடுழுவை, கொடுவரி, கொல்புலி, பாய்புலி, பொறியுலகம் அடுபுலி, வரிதருபுலி, வரியுறு புலி, வல்லியம், வலிமிகுபுலி, வாள்வரி, வேங்கை எனப்பட்டுளது.

5. யானைத்தோல் போர்வை [92 (1,5)]:- சிவபிரான் கரியின் உரி போர்த்துள்ளார். அவர் உரித்த கரி - அடர்செவி வேழம், உரவெங்கரி, கடங்கொல் மால்களிறு, கடமணிமா, கருங்கை யானை, காட்டுமா காடமர் மா, கானமார் கரி, கானார் களிறு, குஞ்சரம், கைம்மா, கொல்லானை, கொல்லியல் வேழம், துங்கமால் களிறு, தொல்லானை, தொளைக்கை யானை, பரிய கைம்மா, பனைக்கைப் பகடு, பிளிறுகுரல் மதவாரணம், பொங்கு நற்கரி, பொருகரி, போதகம், போரார் மதமா, மத்த யானை, மருப்பு நல் ஆனை, மாகரஞ்சேர் அத்தி, மா, மும்மத யானை, மூரிநாகம், மூரி வல்லானை, வஞ்சமத யானை,