பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தேவார ஒளிநெறிக் கட்டுரை


வருமாகரி, வாரணம், வெங்கண் ஆனை, வெங்கண்மால் வரைக்கரி, வெம்முகவேழம் என விளக்கப்பட்டுள்ளது.

39. சிவபிரானின் அபிஷேகப் பொருள்கள்[95]

இளநீர், கரும்பின் சாறு, தயிர், தேன், நீர், நீறு, பசுநெய், பால், வெண்ணெய் இவையே சிவபிரானுக்கு உகந்த அபிஷேகப் பொருள்கள். முக்கியமாய் “ஆனிடை ஐந்து” அவருக்கு மகிழ்ச்சி. சிவத்யானராய் அபிஷேகத்துக்கு “ஆனைந்து” உதவுபவர் “அருள்வேந்தர்” ஆவார். தீயும் (ஊழித்தீயும்) அவருக்கு மஞ்சனமாம்.

குறிப்பு :- ஆனிடை ஐந்து - பால், தயிர், வெண்ணெய், நெய், திருநீறு எனத் தோன்றுகின்றது. “ஆன்முறையாலேற்ற வெண்ணீறாடி” என வருவது கவனிக்கற்பாலது. திருநீறு என்பதற்குப் பதிலாக மோர் என்பாரும் உளர். மோர், வெண்ணெய்க்குப் பதிலாகக் கோசலம், கோமயம் எனக் கொள்வாரும் உளர்.

40. சிவபிரான் அட்ட மூர்த்தி [84]

மண், நீர், அனல், கால், ஆகாயம், மதி, இரவி, இயமானன் எனப்படும் எட்டிலும் இசைந்துள்ள மூர்த்தியாதலின் சிவபிரான் “அட்டமூர்த்தி” எனப்படுவர்.

41. அர்த்தநாரீசுர மூர்த்தி [96]

இறைவர் தேவியொடு என்றும் பிரியா வகைக்குத் தனது ஒரு பாகம் பெண்ணானார். அவர் அங்ஙனம் தேவியோடும் ஈரெழிற் கோலமாய் நிற்கின்ற மதி சொல்லலாந் தகைத்தன்று. அவ் வற்புதமும் செப்பரிது. அது தேவிசெய்த தவப்பேறு என்க. ஈரெழிற் கோலமாய் இறைவர் நிற்பதால் அவருக்கு ஒரு காலிற் கழல், ஒரு காலிற் சிலம்பு; ஒரு காதிற் குழை, ஒரு காதில் தோடு; ஒருபாற் கூந்தல், ஒருபாற் சடைமுடி; வஞ்சி நுண்ணிடையும் உண்டு; அரையில் மேகலையும் உண்டு. அடியார்க்கு அருள் செயும்பொழுது மங்கை பாகராக வந்தே இறைவர் அருளுவார். “தோடுலாவிய காதுளாய்! சங்கவெண் குழையாய்” என்று அர்த்தநாரீசுர மூர்த்தியின் திருக்கோலத்தைத் தியானிக்க வினை நீங்கலுறும்.