பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தேவார ஒளிநெறிக் கட்டுரை

 ஆடரவங்கள் அமைந்தது, அழகியது, வெண்ணீறு பொலிவது, ஓரியல்பில்லாதது, சடை, பிறை, சாம்பற் பூச்சு விளங்குவது, கண்ணிறைவது, தேவார்ந்தது, பலவாயது, நீதி பலவுமே ஒன்றாயது, மறைதொடர்வரியது, ஐந்து பூதங்கள் - ஐம்புலன்கள் - ஐந்து நிலங்கள் - நான்கு கரணங்கள் ஆகிய இவைதம் பயனதாயும் அல்லதாயும் அமைந்தது. பெண்ணுருவமும் அல்ல, ஆணுருவமும் அல்ல, புள்ளிமான் தோல் பொலிவது, வெண்டலை பூண்டது, இருவர் உடற்பொறையுடன் திரிவது, யாவரும் அறியாத்தோர் அமைதியது, விண்ணிற் பொலிவது, பொன்னொப்பது, மின்னொப்பது, பளிங்கொப்பது, வயிரமொப்பது, பவளமொப்பது, பாலொப்பது, நலமளிப்பது, ஒருவனே பலவுருவாய் நிற்பது, திக்குகளே உடையாக அமைந்தது, உலகத்தைப் படைத்தளிப்ப மூன்றுருவாயது, பஞ்சபூதங்களுமாயது.

6. ஒளி:- இறைவன் ஒளியானது கதிரொளி, சுடரொளி, அந்தியன்ன பேரொளி, பவளத் திரள்போல் ஒளி; மிகு தேசு கொண்டது, அழகியது.

7. கண் (விழி):- கதிரொளி வாய்ந்தது, எரி காலுவது, காமதேவனை எரித்தது, இமையாதது, மூன்று கண்களும் முச்சுடர்கள், கண்மேற்கண், நெற்றியிலொரு கண், கண் மூன்று, கண் ஆயிரம்.

8. கண்டம் களம், மிடறு:- இறைவன் கண்டம் அழல் போல விளங்குவது, அழகிய நீல நிறத்தது, நஞ்சுண்டு கனிவுற்றது, களங்கமுள்ளது, மாசிலாமணி போன்றது, கரியது, கருமேகம் போன்றது, இருண்ட (கரிய) தூய மணியன்னது, விடங்கொண்டது, நீலமணி போன்றது.

9. கரம், கை, பாணி:- கரம் எட்டு; அரவம், மான், மழு, பரசு, பறை, எரி, கபாலம், கொடுகொட்டி, சுத்தி, குலம், படை, ஏந்துவது; கரியை உரித்தது, நலமார்ந்தது, மழு வலத்தும் மான் இடத்தும் கொண்டது.

10. கழல்:- அழகியது, அடி புல்குவது, அதிர்வது, ஒலிப்பது, பழையது, இமையோர் தொழுவது, சீர்