பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42. சிவபிரான் திருவுருவம்

அமைந்தது, துயரகற்றுவது, நலம் மலிவது, தொண்டர் பணியாற்றுவது, வீரம் வாய்ந்தது, கொடுத்தற்கரிய வரங்களைக் கொடுப்பது, நாகமே கட்டுங் கழலாயது.

11. காது (செவி):- அழகியது, அரவத்தோடு சங்கக் குழை, பளிங்கின் குழை, குண்டலம், தோடு திகழ்வது.

12. சென்னி:- ஆனஞ்சு ஆடுவது, ஆறு அணிவது, வேட்டுவப் பட்டங் கட்டியது, கொன்றை, மத்தம், வன்னி, மதியம், கங்கை, கொக்கிறகு, தலைமாலை திகழ்வது.

13. சோதி:- இள ஞாயிறன்ன சோதி, பொன்னொத்த சோதி, சுடர்ச் சோதி.

14. தோள், புயம்:- எண்டோள்கள்; மலை திரண்டன்ன தோள்கள், காண அழகியன, துாயன, நீண்டன, மல்லுக்கு உரியன, வில்லுடன் பொலிவன.

15. நடை:- விடையார்நடை, தேவி போற்றுநடை

16. நா:- மறை நிறைந்தது, மறை வளர்வது.

17. நிறம்:- காய் கதிர் நிறம், எரியுறு நிறம், தாதுறு நிறம், தீவெண் திங்களின் நிறம், பசுமை - செம்மை கலந்த நிறம், கடற் பவள நிறம், தேவி பாகங் கலந்தும் செந்நிறமே.

18. நுதல், நெற்றி:- அழகியது, பிறை பொலிவது, அனற்கண் அமர்ந்தது, கோவமிக்கது, திலகஞ் சேர்ந்தது, பட்டம் அமைந்தது.

19. மார்பு (அகலம்):- அழகியது, செங்கதிர் நிறத் து, பொன் நிறத்தது, விளங்குவது, விசாலமானது, உமை பங்கு சேர்வது, பவளமலை போன்றது; திருநீறு, கொன்றைமாலை, எலும்புமாலை, இளநாகம், ஆமை, ஏன மருப்பு, தோல், புரிநூல், சாந்து, திருநீறு பூண்பது.

20. முடி:- அழகியது; அயனும் மாலும் முயன்றும் எட்டமுடியாதது; பூக்கொண்டது; ஆனஞ்சாடுவது; இண்டை யணிந்தது; ஒளி சிறந்தது; கொன்றை, தாமரை, கோங்கு, கோடல், அரவம், கங்கை, மதி