பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தேவார ஒளிநெறிக் கட்டுரை

பூண்டது; மலர் வாசனை கொண்டது; ‘படர்ந்த சடை நெடுமுடி’, ‘தாமரைப் பொன்முடி’, ‘மணிநீண் முடி’, ‘முடியும் ஆயிரம்’ எனப்பட்டுளது.

21. முண்டம்:- திருநீறு பொலிவது.

22. மூரல்:- வெண்ணகை ஒளி வீசுவது.

23. மெய்:- அனல் வடிவது, யானை உரி போர்த்தது, வெண்டலை மாலை பூண்டது, வெண்பொடி யாடியது.

24. மேனி:- அந்தி போன்றது, அரவார்ந்தது, அனலாடுவது, ஒளி கொண்டது, முற்றும் திருநீறு விளங்குவது, உரைவந்த பொன்னின் உருவினது, அழகு பொலிவது, என்பணிந்தது, ஒப்பிலாத ஒளிகொண்டது, ஒருவராலும் உவமிப்பது அரியது, கனல் போன்றது, கூறுபட்டது, ஒருபாகம் மாது இயங்குவது, ஒருபால் 'அரி’ அமைந்தது. நக்க உருவது, மாலயன் காணகில்லாத் தன்மையது. கரித்தோல் பூண்டது, சிவந்தது, செம்பவ நிறத்தது, சங்கொத்தது, பொன் ஒத்தது, பாலொத்தது, சோதியது, பச்சை நிறத்தது, மெய் வாய்ந்தது, மூவாதது, விண்ணோர் விரவுவது, வெள்ளி மால்வரை யன்னது. “விடையார் மேனி” எனப்பட்டுள்ளது.

25. மொழி:- சுருதி மொழி, தூமொழி, மறை மொழி, செஞ்சொல்.

26. வடிவு:- உமையுறு வடிவு, பெண் - ஆண் எனத் தெரிதற்கரிய வடிவு, தழலும் வானும் போலும் வடிவு, கோல வடிவு, சித்த வடிவு, பித்த வடிவு, பொடியணி வடிவு, வஞ்சனை வடிவு, ஆயிரம் வடிவு, வையகம் வணங்க நிற்பதோர் வடிவு.

27. வாய்:- பவளவாய், மணிவாய்.

28. விரல்:- அழகியது, அலங்கல் பூண்டது, அணி கொண்டது, கலை மலிந்தது, மெல்லியது, தொல்லையது, நிருத்தம் புரிவது, பவளநுனை போன்றது, பாதத்திற் பொலிவது.